சென்னையில் இன்று நடந்த நீதிக்கான பேரணி, ஈழத்தின்/மனிதநேயத்தின்பால் அக்கறை கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, நீதிக்கான குரல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை ; அது இன்னும் உரக்க உரக்க ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்னும் செய்தியினை சமூகத்துக்கு மிகச்சிறப்பாக எடுத்துச்சொல்லியிருக்கின்றது.
[singlepic=35,480,360,watermark]
[singlepic=36,480,360,watermark]
சென்னையில் மன்றோ சிலையருகில் துவங்கிய பேரணி ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீதிக்கான முழக்கங்களோடு சேப்பாக்கம் நோக்கி நகர்ந்தது.
பேரணியில் குறிப்பிடும்படியான அளவில் பெண்களும் கலந்து கொண்டதோடு உணர்வோடு முழக்கமிட்டும் வந்ததைக் காண முடிந்தது.
தாங்கி வந்த பதாகைகளில் ஓன்றிலிருந்த வாசகம் - "Genocide in Srilanka | Offical Media Partner - The Hindu" பேரணி தி ஹிந்து நாளிதழ் அலுவலகத்தைக் கடந்த செல்கையில் ஹிந்து ராமுக்கு அர்ச்சனை பலமாக இருந்தது.
பேரணியாக மட்டுமில்லாமல், கடந்து சென்ற வாகனப்பயணிகள் அனைவரிடமும் முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோளின் நகல் விநியோகிக்கப்பட்டது.
பேரணியினர், சேப்பாக்கம் மைதானம் அருகே குழுமியதும், மக்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்த அய்யநாதன் மற்றும் அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் இருவரின் சிறிய உரைகளுடனும் பேரணி நிறைவடைந்தது.
ஈழத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த அவலங்களை அய்யநாதன் விளக்கிப்பேசினார்.
நாம் இனி செய்ய வேண்டிய பணிகளை அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் பட்டியலிட்டார். அவருடைய உரையின் சுருக்கமான வடிவம் :
உலகின் பெரும்பாலான இன விடுதலைகள் சமூகத்தின் மிகச்சிறிய கூட்டமொன்றின் போராட்டத்திலிருந்தே துவங்கியிருக்கின்றன. அதனால் இந்த இளைஞர் கூட்டமும் அத்தகைய விதைநெல்லாக மாறவேண்டுமென வாழ்த்தினார்.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே அவரவர் அரசியல் நலன்களுக்குட்பட்டே ஈழப்பிரச்சினையினைக் கையாண்டதைக் கடுமையாக சாடியபோதும், தேர்தலுக்குப் பின்னர் அது அரசியல் அழுக்கில்லாத இளைஞர்களின் கையில் வந்துள்ளதை வரவேற்றார்.
ஈழ விடுதலைக்கான நான்கு கட்டப்போர்களும் யுத்தக்களத்தில் நடந்தது ; ஐந்தாம் கட்டப்போர் அரசியல் களத்தில் நடைபெறவேண்டும். யுத்தம் என்பது அரசியலின் மற்றொரு வடிவம் ; அரசியல் என்பது யுத்தத்தின் மற்றொரு வடிவம்!
இதுவரை இலங்கை நடத்திய இனப்படுகொலையினை முழுமையாய் வெளிக்கொணரவும், வதைமுகாம்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்டுத்தரவும், சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள போராளிகளின் கால்களை ஊனமாக்கும் சிங்கள இனவெறியினைத் தடுத்து அனைத்துலக போர் விதிகளின்படி அவர்களின் உயிருக்கு உறுதியளிக்கவும் நோக்கியதாய் நமது போராட்டங்களை தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
உண்மை இலட்சியத்துக்கான போர் தோற்றாலும், அந்த இலட்சியத்தின் உண்மைத்தன்மை தோற்காதவரை, அப்போர் தோற்றுவிட்டதாய் எண்ணிவிடவேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்து நிறைவு செய்தார் அருட்தந்தை.
தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.
[singlepic=37,480,360,watermark]
[singlepic=38,480,360,watermark]
[singlepic=39,480,360,watermark]
[singlepic=40,480,360,watermark]
[singlepic=41,480,360,watermark]
Thanks a lot for the coverage. Sitting in a foreign land I wasn't able to participate in this rally. Thanks to everyone who participated and made this rally a big success..
ReplyDeleteதினேஷ்,
ReplyDeleteபேரணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், அதன் நோக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு வாழ்த்திய பலரும் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கு நன்றி!
பகிர்ந்தமைக்கு நன்றி அருள்..
ReplyDeleteThanks a lot..... en nala kalanthu ka mudiyavillai but en ninaivukal en unarchi kal en uyir ellam TAMIL makalkaka....................... வாழ்க தமிழ்
ReplyDelete\\\\\\\\\தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.\\\\\
ReplyDelete\\\\\\\\\தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.\\\\\
ReplyDeleterepeattuu
பேரணியில் நண்பர்களோடு (மகாதேவன், பதிவர் ஜேகே) கலந்துகொண்டாலும், பேரணி பற்றி பதிவு போட இயலா குறையை நீக்கிவிட்டீர்கள். நன்றி! அன்று வந்த கூட்டம், உணர்வால் இணைந்த கூட்டம். பதிவுலகத்தில் பேரணி பற்றி அதிக தகவல் தெரியவில்லை என்பது சிறு வருத்தம்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின்னான தங்களது வருகை ஒரு நிம்மதிப் பெருமூச்சை தந்தது.
ReplyDeleteஉணர்வால் ஒன்றுபடுவோம்.எண்ணங்களும், செயல்களும் வெற்றியை ஈட்டட்டும்.
.
எதிர் பாராம இந்த சைட் பார்க்க வேண்டி வந்தது நிஜமாலுமே சூப்பர்
ReplyDeleteமறுமொழியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDelete