Tuesday, December 18, 2007

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

சென்னைக் காதலும், திருச்சிக் காதலும்

“food court போகலாம் வர்றீங்களா?”

பக்கத்து கியூபிக்களிலிருந்து அவன் கேட்டதும் ‘ஓ போலாமே’ என்றவாறு கிளம்பினாள்.ட்ரெயினிங்கில் ஒரே பேட்சில் இருந்தபோது அவர்களுக்குள் ஆரம்பித்த பழக்கம் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. கோவையில் ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வந்த அவனுக்கும், மதுரையில் ஒரு மகளிர் கல்லூரியில் MCA முடித்து வந்த அவளுக்கும் எதிர் பால் நட்பு கொள்ள இங்கு வந்துதான் முதல் வாய்ப்பு. இவர்கள் பேட்சில் இருந்த பலரும் வேறு நிறுவனங்கள்/ஆன்சைட் என்று கிளம்பிவிட நிறுவனத்தின் சென்னை கிளையில் இவர்கள் பேட்சில் மிஞ்சியிருந்தது அவர்களிருவரும்தான் என்பதும் அவர்களுக்குள் நெருக்கம் கூடுவதற்கு ஒரு காரணம். ஒன்றாக சாப்பிடப் போவது, தாமதாமானால் அவளைக் கொண்டு போய் விடுதியில் விடுவது என்று ஆரம்பித்து தீபாவளிக்கு துணி தேர்வு செய்யக்கூட அவன் தேவைப்படும் நிலை வரை வந்த பின்னும், பேச்சில் மட்டும் இன்னும் ‘வாங்க போங்க’ தான். நட்பைத் தாண்டி எப்பொழுதோ அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாலும் இன்னும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, அவ்வளவே. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தவளை, முதல்நாள் இரவு வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் திருமணப் பேச்சு, விரைவுபடுத்தியிருந்தது. இப்பொழுதே கேட்டுவிடுவது என்ற முடிவோடு அவனுடன் நடந்தாள்.

‘தப்பா நெனச்சுக்க மாட்டீங்கன்னா நீங்க என்ன காதலிக்கிறீங்களானு நான் தெரிஞ்சக்கலாமா?’
‘ம்ம்ம்…ஆமா காதலிக்கிறேன்’
‘அப்புறம், இவ்ளோ நாளா எதுவுமே சொல்லல’
‘அதிருக்கட்டும். நீங்க என்னக் காதலிக்கிறீங்களா’
‘ம்ம்ம்’
‘நீங்களும் ஏன் எதுவுமே சொல்லல’

நெடுநேரத்திற்கான ஓர் உரையாடல் மிக எளிதாக துவங்கியிருந்தது.

*

திருச்சி நகருக்கு வெளியே இருந்த அந்தக் கல்லூரியில் எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி. மூத்த மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் இரண்டாமாண்டு படிக்கும் அவள் மட்டும் தனியாக சுரத்தில்லாமல் நின்றிருந்தாள். கல்லூரி நிர்வாகிகளின் வழக்கமானப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அவளுக்கு தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு வர சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்தில் மேடையைப் பார்த்தபடி அவள் தோழிகள் மட்டுமே நின்றிருந்தனர். மீண்டும் அதே போலொரு உணர்வெழுந்து அவள் வலப்புறம் திரும்பிய போது புதிய மாணவர்கள் பக்கமிருந்த ஒரு தலை தன்னைத் திருப்பிக் கொண்டது. அவள் அவன் முதுகையே பார்த்தபடியிருக்க, கொஞ்ச நேரத்தில் அவன் தன் முகத்தை அவள் பக்கம் மெதுவாக திருப்பியதும் அவளுக்குள் வேகமாக அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது.

*

அவனிடம் காதலைப் பகிர்ந்துவிட்ட மகிழ்ச்சியிருந்தாலும், வீட்டில் எப்படி சொல்லுவது என்கிற குழப்பத்தோடு இருந்தவளை அன்று மாலை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
‘எனக்கு எங்க வீட்ல எப்படி சொல்றதுன்னுதான் பயமா இருக்குங்க. எங்கப்பா வேற சீக்கிரமா என் கல்யாணத்த முடிச்சிடனும்னு தீவிரமா மாப்பிள்ள தேடிட்டு இருக்கார்’

‘இப்போதான மாப்பிள்ள தேட ஆரம்பிச்சிருக்காங்க. ஜாதகமெல்லாம் பொருந்தி நல்ல வரம் அமையறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகிடும். அதுக்குள்ள சொல்லிடலாம்’

‘ப்ச். புரியாமப் பேசாதீங்க. இந்த மார்ச்சுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல இருக்காம். அதனால இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிச்சிடனும்னு எங்கப்பா சொல்லிட்டு இருக்கார். இந்த வாரம் நான் வீட்டுக்குப் போகும்போது சொல்லிடலாம்னு இருக்கேன். ஆனா வேற ஜாதினு தெரிஞ்சதும் எங்கப்பா கோபப்படறதையோ, எங்கம்மா அழறதையோ என்னாலத் தாங்க முடியாது. அதான் உங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமானு யோசிக்கிறேன்’

‘இங்க பாரு. உங்க அப்பா கிட்ட நேர்ல வந்து பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. ஆனா அதுக்கு முன்னாடி மொதல்ல எங்க வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கறது நல்லதுனு நெனைக்கிறேன். எனக்கு இப்போதான் இருபத்தஞ்சு வயசு முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு வருசம் போனாதான் எங்க வீட்ல இந்தப் பேச்சே எடுக்க முடியும். அதனாலதான் சொல்றேன். நீ எப்படியாவது உங்க வீட்ல கல்யாணத்த மட்டும் இன்னும் ஒரு வருசம் தள்ளிப் போடு. மீதியெல்லாம் நல்லதா நடக்கும்’

அவள் செல்பேசி சிணுங்கியது. அவளுடைய அப்பாதான்.
‘சொல்லுங்கப்பா’
‘நல்லாருக்கியாம்மா?’
‘நல்லாருக்கேன்ப்பா. அம்மா எப்படியிருக்காங்க’
‘ம்ம்ம் நல்லாருக்கா. அப்புறம் இந்த வாரம் ஊருக்கு வந்துட்டுப் போம்மா. ஒரு வரன் வந்திருக்கு. ஞாயித்துக்கிழம பொண்ணு பாக்க வர்றோம்னு சொல்லிட்டாங்க. நானும் சரினு சொல்லியிருக்கேன்’

*

கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதமாய் அவன், அவளிடம் பேசுவதற்கு முயற்சி செய்வதும் அவனைப் பார்த்தாலே அவள் விலகிப் போவதும் தொடர்ந்தபடியிருந்தது. அவளைக் காலையில் வந்து விடுவதற்கும், மாலையில் வந்து அழைத்துப் போவதற்கும் அவளுடைய அப்பா வந்துவிடுவதால், விடுதியில் தங்கியிருந்த அவனுக்கு அவளைத் தனியாக சந்திக்க கல்லூரி மட்டுமே ஒரே இடமா இருந்தது. ஆனால் அதையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் எல்லா வகுப்புகளும் அசைன்மெண்டிலும், தேர்விலும் பின்னப்பட்டிருந்தன. டீ, லஞ்ச் ப்ரேக் எதற்கும் அவள் கேண்டீன் பக்கம் வருவதில்லை. அவள் விலகலைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அன்று லஞ்ச் ப்ரேக்கில் அவள் வகுப்புக்குள் நுழைந்தான். அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
‘ஏன் இப்படி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க? உன் கூட இருக்கனும்னுதான் இந்த காலேஜ்லயே வந்து சேர்ந்தேன். என் கூட ஒரு பத்து நிமிசம் பேசக் கூட உனக்கு விருப்பமில்லையா?’
கண்ணீர் வர வர அதனைத் துடைத்தபடியே அமைதியாக இருந்தாள். அவள் தோழிகள் எல்லோரும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருக்கவும்,
அவள் அழுவதைக் காணச்சகியாதவனாய் ‘ஈவினிங் கேண்டீன்ல வெயிட் பண்றேன். ஒரு பத்து நிமிசம் வந்துட்டுப் போ. ப்ளீஸ்’
மாலை கேண்டினில் அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் தந்ததாய்ச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள் அவள் தோழியொருத்தி.

*

அந்த வெள்ளிக்கிழமை அவளை வைகை எக்ஸ்பிரசில் மதுரைக்கு அனுப்பி வைக்க எக்மோர் சென்றான். கவலையுடன் இருந்தவளை ‘எதுக்கிப்போ இவ்ளோ சோகமா இருக்க? இப்போ என்ன பொண்ணு பாக்கதான வர்றாங்க. வரட்டும். நீ மாப்பிள்ளயப் பிடிக்கலன்னு சொல்லிடு. அட்லீஸ்ட் இன்னும் ஒரு ஆறு மாசமாவது வெயிட் பண்ணு. அதுக்குள்ள எங்க வீட்ல பெர்மிஷன் வாங்கிட்றேன்’
‘நானா வெயிட் பண்ண மாட்டேன்னு சொல்றேன்?’
அவள் கஷ்டமெல்லாம் கோபமாக வந்தது.
‘சரி சரி இந்த டைம் போயிட்டு வா. நான் அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது எங்க வீட்ல சொல்லிட்றேன்’
தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ரயில் நிலையம் விட்டு வெளியே வருவதற்குள் அவன் செல்பேசிக்கு அழைப்பு வந்தது, அவன் அக்காவிடமிருந்து.
சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தவன் ‘உங்க கம்பனில கங்கானு புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்காம். முடிஞ்சா விசாரிச்சு வச்சுக்கோ’ என்று அவன் அக்கா சொன்னதும் குழம்பினான்.
‘எதுக்கு?’
‘நீ தான் லவ் பண்றதுக்கு பொண்ணு கெடைக்கலன்னு சொல்லிட்டு இருந்தியே அதுக்குதான்’
‘கொஞ்சம் தெளிவா சொல்றியா?’
‘இல்லடா நம்ம சித்தப்பா அவருக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் பொண்ணுக்கு உன்னக் கேட்கிறாங்கனு சொல்லி அப்பாகிட்ட பேச வந்தாங்களாம். அப்பா இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்னு சொல்லிட்டாங்க போல. ஆனா பொண்ணு வீட்லையும் இன்னும் ரெண்டு வருசம் கழிச்சே வச்சிக்கலாம், ஜாதகப் பொருத்தம் மட்டும் பாத்துக்கலாம்னு கேட்ருக்காங்க. கடசில ஜாதகமெல்லாம் பொருந்தியிருக்காம். பொண்ணும் உங்க கம்பனிலதான் ஜாய்ன் பண்ணியிருக்காளாம். அதான் ஒரு இன்ஃபர்மேஷன் கொடுக்கலாமேனு கால் பண்ணினேன். விளக்கம் போதுமா?’
அவனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. கோயம்பேட்டுக்குக் கிளம்பினான் கோவை பேருந்தைப் பிடிக்க.

*

அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் அவனுக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது. இந்தக் காரணத்துக்காக தான் அவள் அவனை தொடர்பு கொள்ளாமல் விலகி விலகிப் போகிறாள் என்பது புரிந்துதான் அவளோடு நெருங்கியிருக்க இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தான். ஆனால் அவனுக்கு அது புரியாதது போலவும், அதனைப் புரிய வைப்பதாகவும் நினைத்துக் கொண்டு ஏழு பக்கத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். லூசு லூசு என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவளை கல்லூரியில் வந்து விட்டுப் போனதும் அவளுடைய அப்பாவை பைக்கில் தொடர்ந்தான். அந்த ஏரியாவில் குறுக்கும் நெடுக்குமாக பிரிந்த சாலைகளில் ஏதோ ஒன்றின் மத்தியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் அவர். கொஞ்சம் நேரம் கழித்து அதே வீட்டுக்குள் அவனும் நுழைந்தான்.

*

கோவையில் தன் வீட்டிற்குப் போனதும் அவனுடைய சித்தப்பா வந்து போன விசயத்தை அவனுடைய அம்மா ஆர்வமாய்ச் சொல்ல ஆரம்பித்தார். கோனியம்மன் கோவிலில் வைத்து அந்தப் பெண்ணையும் ஒருமுறைப் பார்த்துவிட்டதாகவும் அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறாளென்றும் பெருமையாக அவன் அம்மா சொல்லிக் கொண்டேபோக, தன்னுடையக் காதலைத் தன்னைப் பெற்றவர்களிடம் சொல்லுவது சினிமாவிலோ, கதைகளிலோ உள்ளபடி அத்தனை எளிதானதில்லை என்று உணரத் துவங்கினான். அவனுடைய அப்பாவும் அவனும் மட்டும் தனித்திருந்த மாலை நேரத்தில் எங்கேயோப் பார்த்தபடி ஒழுங்கில்லாத, இடைவெளிகள் நிறைந்த பேச்சில் தன் காதலைப் பற்றி சொல்லிவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான். அவரோ அமைதியாக இருந்தார். அவருடையக் கோபங்களைப் பலமுறை எதிர்கொண்டு பழகிவிட்ட அவன், அதைப் போலொன்றையே எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவருடைய புரிந்துகொள்ள முடியாத மௌனம் வேதனையைக் கூட்டுவதாக இருந்தது.’வேற சாதியில பொண்ணெடுத்தா நாளைக்கு நம்ம சாதி சனத்துல யாராச்சும் மதிப்பாங்களா?’ அவர் கொடுத்த மௌனத்தையே அவருக்கும் பதிலாகக் கொடுத்தான். அவனைப் போலவே அவருக்கும் இந்த மௌனம் வேதனையைக் கொடுத்திருக்கலாம். ‘மொதல்ல அவங்க வீட்ல சொல்ல சொல்லு. அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னுப் பாப்போம்’ என்று மட்டும் சொல்லி வைத்தார். அதுவே அவனுக்கு பாதி சம்மதம் கிடைத்த மாதிரியிருந்தது. சந்தோசமாய் இந்த விசயத்தை அவளுக்கு சொல்ல நினைத்தவன் அங்கே அவளை பெண் பார்க்க வருகிற அவஸ்தையில் இருப்பாளென்பதால் அவளே அழைக்கட்டும் என்று காத்திருந்தான்.

*
அவளுடைய அப்பாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவன், தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வந்த விசயத்தை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
“தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எனக்கும் சந்தோசம்தான். மொதல்ல ரெண்டு பேருக்கும் படிப்பு முடியட்டும். ஆனா உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். மொதல்ல உங்க வீட்ல சம்மதம் வாங்குங்க. அதுக்கப்புறம் நானே உங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா அம்மா கிட்டப் பேசறேன்.”
“சரிங்க. நான் எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு மறுபடி வர்றேன்”
ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் அவன் வீட்டிற்குப் போக சத்திரம் பேருந்து நிலையம் வந்தான்.

*
அடுத்த நாள் மதியம் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும் அவசரமாய்க் கேட்டான்
‘ஏ…என்னாச்சு?’
‘ம்ம்ம் கல்யாணம் நிச்சமாயிடுச்சு’
‘…’
‘என்ன சார் பயந்துட்டீங்களா? ஒன்னும் ஆகல. அவங்க வரும்போது யாரோ தெருவுல வெறகு எடுத்துட்டுப் போனாங்களாம். சகுனம் சரியில்லனு கடமைக்கு வந்து பாத்துட்டுப் போயிட்டாங்க’
‘அப்பாடா… ஏ இன்னொரு விசயம். நான் இப்போ கோயம்புத்தூர்ல இருக்கேன் தெரியுமா?’
‘என்ன விசேசம். சொல்லாமக் கூட போயிருக்கீங்க?’
‘சென்னை வா ஒரு குட் நியூஸ் சொல்றேன்’

அடுத்த நாள் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் சந்தித்தபோது எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டான்
‘இப்போ சொல்லுங்க மேடம். நான் எப்போ மதுரை வந்து உங்கப்பாவ மீட் பண்ணனும்?’
‘எங்க வீட்ல இப்படி பொண்ணுப் பாக்கறதுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டு இப்போ திடீர்னு நான் இந்த விசயத்த சொன்னா நான் காதலிக்கிறேன்ங்கற கோபத்த விட அவர்கிட்ட கடைசி நேரத்துல சொல்றேனேங்கற கோபம் அதிகமா இருக்குமோனு பயமா இருக்கு’
‘சரி நானே உங்கப்பாகிட்ட பேசவா?’
‘இல்லங்க. நேர்ல சொல்றதுக்கு எனக்கே ரொம்ப தயக்கமா இருக்கு. இதுல நீங்க அங்க வந்து…எங்க ஊரப் பத்தி உங்களுக்குத் தெரியாது’
‘அப்போ எப்படிதான் சொல்றது?’
‘ம்ம்ம் எல்லாத்தையும் லெட்டரா எழுதியனுப்பலாம்னு இருக்கேன்’
‘அது அவ்வளவு மரியாதையா இருக்காது. உனக்கு நேர்ல பேசறதுக்கு தயக்கமா இருந்தா எல்லாத்தையும் லெட்டரா எழுதி அடுத்த தடவ ஊருக்குப் போகும்போது நேர்லயே உங்கப்பாகிட்ட கொடுத்துடு’
‘ம்ம்ம் அப்படிதாங்க பண்ணனும்’
‘இன்னும் என்ன வாங்க போங்க் னே சொல்லிட்டு இருக்க?’
‘ம்ம்ம் மாத்திக்கறேன்’

*

பேருந்து திருச்சியை விட்டு வெகு தொலைவு வந்திருந்தது. திருச்சியில் அவளுடைய அப்பா சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டான். “உங்களுக்கு மட்டும் இதுல சம்மதம் இருந்தாப் போதாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் முழுமனசோட சம்மதிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்”. உண்மைதான். வீட்டில் முழுமனதோடு சம்மதிப்பார்களா? அப்பா சம்மதித்தாலும் அம்மா ஒத்துக் கொள்வது சாத்தியமா? என்று யோசித்தபடியே உறங்கிப் போனான். ஊருக்கு வந்து சேரும்போது மாலையாகியிருந்தது. சோர்ந்து போனவனாய் வீட்டுக்குப் போனதும் அவன் அம்மாவின் மடியில் சாய்ந்தான். ‘என்னப்பா சொல்லாம கூட வந்திருக்க? காலேஜ் லீவா? ஒடம்பெதுவும் சரியில்லையா?’ பரிவாய்க் கேட்டார். வெகு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு அழ வேண்டும் போலிருந்தது. உடைந்து போனவனாய் ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் சொல்லத் துவங்கினான்.முழுவதும் சொல்லி முடித்ததும் ‘அவளுக்கு என்ன விட்டா வேற யாரும் இல்லனு நான் இத கேட்கலம்மா. எனக்கும் அவள விட்டா வேற யாரும் இல்ல. அவ கூட இருக்கிற மாதிரி வேற எந்தப் பொண்ணுகூடவும் என்னால வாழ முடியாது. நீதான் அப்பாகிட்ட எப்படியாவது சொல்லனும்’ மீண்டும் அவள் மடியில் முகம் புதைந்தான். அன்று வீட்டில் நடந்த மிக உருக்கமானப் பேச்சுக்களுக்களின் கடைசியில் அவன் அப்பாவிடம் அவன் அம்மா சொன்னார் ‘கல்யாணத்துல வந்து மொய் வச்சிட்டு போறதோட சொந்தக்காரங்க வேல முடிஞ்சு போயிடும்ங்க. கல்யாணத்துக்கப்புறமும் நம்ம பையன் சந்தோசமா இருக்கானான்னு யாரும் வந்து பாத்துகிட்டு இருக்கப் போறதில்ல. அதுக்கப்புறம் அவனுக்கொன்னுன்னா அத நாமதான் பாக்கனும். சொந்த பந்தம் என்ன சொல்லுதுன்னு பாக்காம பையன நெனச்சுப் பாப்போம். நாமளே திருச்சிக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்’ புயலுக்குப் பின் அமைதி மாதிரி எல்லாம் தெளிந்து ஒரு தீர்வு வந்தது.

*

மதியம் சாப்பிடும்போது கேட்டான் ‘என்ன அப்பாவுக்கு எழுத வேண்டிய லெட்டர் எழுதி முடிச்சுட்டியா? எப்போ ஊருக்குப் போறதா இருக்க?’
‘ம்ம்ம் பாதி எழுதிட்டேன். இன்னும் பாதி எழுதனும்’
‘சரி போறதுக்கு முன்னாடி எங்கிட்ட காட்டிட்டுப் போ’
‘அதெல்லாம் முடியாது. நான் போயிட்டு வந்துட்டு அந்த டைரிய உங்கிட்டவே கொடுத்துட்றேன் அப்புறம் அத நீயே வச்சிக்க’
‘டைரியா?’
‘ஆமா லெட்டர் எல்லாம் பத்தல. அதான் டைரி’
சிரித்துக் கொண்டான்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு அவளிடம் இருந்து வந்த மெசேஜ் : ‘டைரிய அப்பாகிட்ட கொடுக்கிறதுக்கு நான் மதுரைக்குப் போயிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப டென்சனா இருக்கு. நீ கால் எதுவும் பண்ண வேணாம். நான் திங்கட்கிழம வந்து எல்லாத்தையும் சொல்றேன்’
அந்த வெள்ளி இரவிலிருந்து திங்கள் காலை வரை அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. மொத்தம் மூன்று முறை கூட சாப்பிட்டிருக்க மாட்டான். ஞாயிறு இரவே அவளை அழைத்தான். அவளுடைய செல்பேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காலை எழுந்ததும் மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். அவசரமாக அலுவலகத்துக்கு சென்றான். அவள் வரவில்லை. மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆஃப். மாலை வரை அவளும் வரவில்லை. மறுநாள் முழுக்க, ஸ்விட்ச் ஆஃப். அதற்கு மறுநாளும், ஸ்விட்ச் ஆஃப். அலுவலகத்துக்கும் அவள் வரவில்லை. நேரடியாக ஹெச் ஆரிடமே கேட்டான். ‘அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுனு ரிசைன் பண்றதா போன்ல சொன்னாங்களே’
அவனுக்கு உடல் முழுக்க ரத்தம் வற்றியது போலானது.

*
அடுத்த நாள் மாலை திருச்சியில் தன்னுடைய பெற்றோருடன் அவள் வீட்டில் இருந்தான். மகனின் விருப்பம் தான் தங்களின் விருப்பம் என்றும் இந்தத் திருமணத்துக்கு முழுமனதோடு சம்மதிப்பதாகவும், அவளை தங்களின் மகளாகவேப் பார்த்துக் கொள்வதாகவும் அவன் அம்மா சொல்ல, அவன் அப்பாவும் அதையே மீண்டும் சொன்னார். இதெல்லாம் முன்னாடியே நடந்திருக்கலாமென அவளுடைய அப்பா வருத்தப்பட்டுக் கொண்டார். அவளும் அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்தாள். இருவருக்கும் படிப்பு முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று உறுதி செய்யப்பட்டது. தன்னுடைய பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு அடுத்த நாள் காலை அவளைக் கல்லூரியில் சந்தித்தான்.
‘thanks’
‘போடி லூசு’
எல்லாம் கனவு போல இருந்தது அவளுக்கு.

*
ஹெச் ஆரிடமிருந்து அப்படியொரு செய்தியைக் கேட்டதும் அலுவலகம் போவதற்கே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அவளோடு அமர்ந்து பேசிய இடங்கள் எல்லாம் கேலி பேசுவது போல இருந்தன. அடுத்த வாரம் அவளுடைய ஜிமெயிலிலிருந்து ஒரு மடல் வந்திருந்தது. ஆர்வமாய்ப் படித்தான். அவனிடம் பேசுவதற்கே அவளுக்குத் தகுதியில்லையென்றும் அதனால்தான் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும் எழுதியிருந்தாள். டைரியோடு அவள் வீட்டுக்குப் போனபோது அன்றைக்கும் அவளைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்திருந்ததாகவும், அவளுக்கு அது முன்பே தெரியாதென்றும், வந்தவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக இரண்டு குடும்பங்களிலும் சம்மதம் சொல்லி கடைசியாக இவளிடம் கேட்ட போது அந்த சூழ்நிலையில் இந்த விசயத்தை சொல்ல அவளுக்கு தைரியமில்லையென்றும், தன்னை மன்னித்து விடும்படியும் இன்னும் பல அறிவுரைகளும் சொல்லப்பட்டு பெரிதாய் நீண்டிருந்தது அந்த மடல்.

*
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியே நீ தான்டா லூசு’
‘ஆமா. லூச லூசுதான் கல்யாணம் பண்ணிக்க முடியும்’
‘நான் சீரியசா கேட்கறேன், முழு சம்மதத்தோடதான் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘உண்மைய சொன்னா இதுகூட என்னோட சுயநலம் தான். உன்னத் தவிர வேற யார்கூடவும் என்னால சந்தோசமா வாழ முடியாது தெரியுமா?’
அவனை அணைத்துக்கொண்டாள்.

*
அவளுக்குத் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கு அலுவல் நிமித்தம் ஓராண்டு அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது. அவளைப் பிரிந்த மன உளைச்சலில் இருந்து விடைபெற அவனும் அதனை ஒப்புக்கொண்டான். அமெரிக்கா சென்ற ஒரு மாதத்தில் கங்கா என்ற பெண்ணிடமிருந்து அவனுக்கு ஒரு மடல் வந்திருக்கவும் ஆர்வமில்லாமல் திறந்து பார்த்தான்.
‘நான் **வோட ப்ரெண்ட். மதுரையிலிருந்து இந்த மெயில் அனுப்புறேன். அவளப் பெண் பார்க்க வந்தப்பவே உங்க விசயம் எல்லாம் எங்கிட்டதான் சொல்லி அழுதா. உங்க மெயில் ஐடி கொடுத்து என்னதான் உங்களுக்கு அந்த விசயத்த மெயில் அனுப்ப சொல்லியிருந்தா. நான் அவளையே உங்களுக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட சொன்னேன். அவ அப்போ உங்ககிட்ட பேசினாளா இல்லையானு எனக்குத் தெரியாது. நானும் மெயில் அனுப்பல. ஆனா இப்போ நான் இந்த மெயில் அனுப்புறதுக்கு ஒரு காரணம், அவ இப்போ ஒரு விதவை. அவளோட ஹஸ்பெண்ட் ஒரு ஆக்சிடெண்ட்ல போன வாரம் எறந்துட்டார். இத உங்களுக்கு சொல்லனும்னு தோணுச்சு. அதனால சொல்லிட்டேன்’

அதன் பிறகு அந்த கங்கா மூலம் அவளுடைய செல்பேசியெண்ணை வாங்கி அவளிடம் பேசினான். இவன் குரலைக் கேட்டதும் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் இவன் அழைக்க ஓரிரு நாட்களில் இந்த செல்பேசியெண் உபயோகத்தில் இல்லை என்று குரல் வந்தது. ஏற்கனவே அவள் துயரத்தில் இருப்பாள் அவளைத் தொல்லைபடுத்த வேண்டாமென அவளைத் தொடர்புகொள்வதை நிறுத்தினான். ஓரிரு மாதங்கள் கழித்து அந்த கங்காவுக்கே மீண்டும் மடலனுப்பி அவளைப் பற்றி விசாரித்த போது அவள் திருச்சி BIM –இல் MBA படிக்கப் போய்விட்டதாகவும் அவர்கள் குடும்பமே திருச்சிக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரியவந்தது. அமெரிக்காவில் அந்த ஒரு வருடத்தை மிக வேகமாகக் கடத்தி விட்டு சென்னை திரும்பியவன் வேலையிலிருந்தும் விலகிவிட்டு அடுத்த ஆண்டு அவனும் BIM –இல் MBA சேர்ந்தான். முதல் நாள். அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் கல்லூரிக்கு செல்ல,
அங்கு எந்த அமர்க்களமுமில்லாமல் எளிமையாக நடந்து கொண்டிருந்தது முதலாமாண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சி...


(சர்வேசன் போட்டிக்கு அனுப்புற மாதிரி ‘நச்’ இருக்கானு சொல்லிட்டுப் போங்க :-))

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

106 comments:

  1. Fantastic, but big!

    ஆனாலும், 'நச்' இருப்பதால், தாராளமா போட்டிக்கு அனுப்பலாம்.

    நல்லா எழுதறீங்க 'சிறு' கதை :) !

    ReplyDelete
  2. /Fantastic, but big!

    ஆனாலும், 'நச்' இருப்பதால், தாராளமா போட்டிக்கு அனுப்பலாம்.

    நல்லா எழுதறீங்க 'சிறு' கதை :) !/

    நன்றிங்க… ரொம்ப பெருசா இருந்தா ஊடல் கதையவே அனுப்பிடலாம்னுதான் கேட்டேன் ;-)

    ReplyDelete
  3. its really a nice and excellent way of writing... keep going... all the best...

    ReplyDelete
  4. oh aruperungo is it a story.

    mudivil azhugaivanthathu.

    maari maari padikumpothu eppadi ithu mudichi vizhum entirunthathu.

    mudithavitham nantaga irunthathu

    good luck

    ReplyDelete
  5. கொஞ்சம் நீளமான 'சிறுகதை' தான், எனினும் ரொம்ப நல்லா இருந்துச்சு :)

    ReplyDelete
  6. / Hi. xlent writing style, gud form./

    நன்றி ஊற்று!!!

    ReplyDelete
  7. /its really a nice and excellent way of writing... keep going... all the best.../

    நன்றிங்க பாலாஜி சீனு!!!

    ReplyDelete
  8. /oh aruperungo is it a story. /

    இதெல்லாம் ஒரு கதையானு கேட்கறீங்களோ? ;-)

    /mudivil azhugaivanthathu.

    maari maari padikumpothu eppadi ithu mudichi vizhum entirunthathu./

    முடிச்சு விழுந்து முடிச்சு அவிழ்ந்ததா?

    /mudithavitham nantaga irunthathu

    good luck/

    நன்றிங்க….அனானி!!!

    ReplyDelete
  9. /கொஞ்சம் நீளமான 'சிறுகதை' தான், எனினும் ரொம்ப நல்லா இருந்துச்சு :)/
    சற்றே பெரிய சிறுகதை தான்… நீளமா இருந்தாலும் வாசிச்சதுக்கு நன்றிங்க தல!!!

    /அருமையோ அருமை/
    இது எதுக்கு ரெண்டாவது தடவ?

    ReplyDelete
  10. கலக்கல்...சூப்பர்...அருமை....நன்றாக எழுதியிருக்கிங்க அருள் ;))

    போட்டிக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  11. எக்ஸலண்ட் மேன்...!!!!!!

    ReplyDelete
  12. /கலக்கல்...சூப்பர்...அருமை....நன்றாக எழுதியிருக்கிங்க அருள் ;))

    போட்டிக்கு வாழ்த்துக்கள் ;)/

    நன்றி கோபி. ஆனா எல்லாம் சொல்லிட்டு கடைசில எதுக்குங்க அந்த ஸ்மைலி? :-)
    எழுதின கதை நல்லாருக்குனு சொல்றீங்களா இல்லையான்னே கொழப்பமாயிடுது … அதான் :-)

    ReplyDelete
  13. /hi its nice/

    நல்லாருக்குனு சொல்றதுக்கு ஏங்க பேரில்லாம வரணும்? Nick name லயாவது பேர போடலாமே!!!

    ReplyDelete
  14. /எக்ஸலண்ட் மேன்...!!!!!!/

    மொக்கை விருது மீட்டிங் பிஸிலயும் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க :-)

    ReplyDelete
  15. கலக்கல் அருட்பெருங்கோ :)))

    அட்டகாசமா எழுதி இருக்கீங்க.

    நான் கூட மொதல்ல சென்னை காதலுக்கும் திருச்சி காதலுக்கும் உள்ள வித்தியாசத்த சொல்ல வரீங்கன்னு நெனச்சேன் :)

    ReplyDelete
  16. மிக மிக அற்புதமான பதிவு..
    இந்த முடிவை ஏதிர் பார்க்கவில்லை..


    //கலக்கல் அருட்பெருங்கோ :)))

    அட்டகாசமா எழுதி இருக்கீங்க.

    .//

    ரிப்பீட்டேய் ...

    ReplyDelete
  17. பெரிய்ய சிறுகதையா இருந்தாலும் சுவாரசியமாய் இருந்தது . வாழ்த்துக்கள் :)


    Vicky

    ReplyDelete
  18. /கலக்கல் அருட்பெருங்கோ :)))

    அட்டகாசமா எழுதி இருக்கீங்க.

    நான் கூட மொதல்ல சென்னை காதலுக்கும் திருச்சி காதலுக்கும் உள்ள வித்தியாசத்த சொல்ல வரீங்கன்னு நெனச்சேன் :)/

    நன்றி இம்சையரசி!!
    கொழப்புறதுக்காகதான் வண்ணமெல்லாம் மாத்திப் போட்டு எழுதுனோம் :-)

    ReplyDelete
  19. /கலக்கிட்டீங்க./

    நன்றி ஸ்ரீனி!!

    /பெரிய்ய சிறுகதையா இருந்தாலும் சுவாரசியமாய் இருந்தது . வாழ்த்துக்கள் :)/

    பெரிய்ய சிறுகதைய வாசிச்சதுக்கும், வாழ்த்தினதுக்கும் நன்றி விக்கி!!! :-)

    ReplyDelete
  20. /மிக மிக அற்புதமான பதிவு..
    இந்த முடிவை ஏதிர் பார்க்கவில்லை..


    //கலக்கல் அருட்பெருங்கோ :)))

    அட்டகாசமா எழுதி இருக்கீங்க.

    .//

    ரிப்பீட்டேய் .../

    ரொம்பவும் நன்றிங்க விஜய் ப்ரசன்னா!!!

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு கதை...திருப்பம், முடிவு எல்லாமே நச்சுன்னு இருக்கு, போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. கதை அருமை... வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  23. வழக்கம் போல ஒரு காதல் கதயா இருக்கும்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன். ஆனா முடிவுல ஆச்சரியப் பட்டேன். சாதாரண கதயா இருந்தாலும் அதச் சொன்ன விதம் மிக அருமை...!!! வாழ்த்துக்கள், முயற்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  24. /ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு கதை...திருப்பம், முடிவு எல்லாமே நச்சுன்னு இருக்கு, போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!/

    ரொம்ப நன்றி திவ்யா! பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்!!

    ReplyDelete
  25. /கதை அருமை... வாழ்த்துக்கள்...!/

    நன்றிங்க ஜெயகணபதி!!!

    ReplyDelete
  26. /வழக்கம் போல ஒரு காதல் கதயா இருக்கும்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சேன். ஆனா முடிவுல ஆச்சரியப் பட்டேன். சாதாரண கதயா இருந்தாலும் அதச் சொன்ன விதம் மிக அருமை...!!! வாழ்த்துக்கள், முயற்சிகள் தொடரட்டும்./

    நன்றிகள் நெ.கி.
    சாதாரண கதைதான். சஸ்பென்ஸ் வைத்து நச்சென்று முடிக்க முயற்சி செய்தேன் அவ்வளவே!!!

    ReplyDelete
  27. காதல் முரசு,

    கொஞ்சம் நீளமாக அமைந்து விட்டாலும் கதை படிக்க சுவராசியமாக இருந்தது.... :)

    ReplyDelete
  28. / காதல் முரசு,

    கொஞ்சம் நீளமாக அமைந்து விட்டாலும் கதை படிக்க சுவராசியமாக இருந்தது.... :)/

    நன்றி ராம்!!! சர்வேசன் போட்டிக்கு இதையே அனுப்புவதற்கு தீவிரமா சிந்திக்கலாமானு யோசிக்க முடிவு செய்வதாக உத்தேசம் :-)

    ReplyDelete
  29. wow!

    Excellent story.

    ரிசைன் பண்ணிட்டு 'காலேஜ்'க்கு போலாம்தான் 'பூவா'க்கு என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்!!

    ReplyDelete
  30. /wow!

    Excellent story.

    ரிசைன் பண்ணிட்டு 'காலேஜ்'க்கு போலாம்தான் 'பூவா'க்கு என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்!!/

    நன்றி சிவா!!! நல்லா சம்பாதிச்சுட்டு அப்புறமா படிங்க… :-)

    ReplyDelete
  31. This is very good.. aanal..anthe 'Oodal' sirukathai 'nach' ena ullathu..!!

    ReplyDelete
  32. Hi Arun, I started reading your blog recently. Amazing articles. CHennai kadhalum tiruchi kadhalum is simply superb.....Keep the good work...

    Regards,
    Venkatesh.

    ReplyDelete
  33. / This is very good.. aanal..anthe 'Oodal' sirukathai 'nach' ena ullathu..!!/
    நன்றி ஆர்கே, இதையே போட்டிக்கு எடுத்துக் கொண்டு விட்டார்கள் :-) அதனால் ஊடல் கைவிடப்பட்டது!!!

    ReplyDelete
  34. /Hi Arun, I started reading your blog recently. Amazing articles. CHennai kadhalum tiruchi kadhalum is simply superb.....Keep the good work...

    Regards,
    Venkatesh./

    பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க வெங்கடேஷ்!!!
    நான் அருண் இல்லீங்க, அருள் :)

    ReplyDelete
  35. Excellent..

    Story narration style is similiar to the narration style of the english film Momento(in tamil,kajini).

    Excellent finish..

    ReplyDelete
  36. /Excellent..

    Story narration style is similiar to the narration style of the english film Momento(in tamil,kajini).

    Excellent finish../

    ரசிகன்,
    உண்மைதான். The alternate scenes are in the different time lines of the same story only. But, as in momento, we can’t bring the backward chronological order in the narration in written stories :) or atleast I am not able to do that ;-)

    ReplyDelete
  37. Amazingly written story, with a simple plot. The narration is very fluid and lucid without any hiccups.

    Keep up the Good job. Try writing more. Since your vocabulary is very good, you might even want to try writing a Period story (Raja Rani story), with a modern plot.

    ReplyDelete
  38. மிக அருமையான கதை.
    தொடருங்கள் உங்கள் கலைப்பயணத்தை.

    ReplyDelete
  39. /Amazingly written story, with a simple plot. The narration is very fluid and lucid without any hiccups.

    Keep up the Good job. Try writing more./

    வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ஸ்ரீனி!!!

    / Since your vocabulary is very good, you might even want to try writing a Period story (Raja Rani story), with a modern plot./
    ஆகா… உசுப்பேத்துறாங்களே :)

    ReplyDelete
  40. /மிக அருமையான கதை.
    தொடருங்கள் உங்கள் கலைப்பயணத்தை./

    மிகவும் நன்றி கிருஷ்ணா!!!

    ReplyDelete
  41. மிக அருமை அருட், சூப்பர் .. இரு கதைகளையும் எப்படியோ இனைக்க போகிறீர்கள் என்று தெரிந்துவிட்டாலும். . எப்படி எப்படி என்று ஆவலை தூண்டும் விதமாக இருந்தது... நீளம் தான் கொஞ்சம் அதிகம்..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..
    ஒரு சின்ன அபாயம் (Risk). ஔர்மையான கதை எனினும் சற்று நீளமாக இருப்பதால், சிலர் பொறுமையின்று, பாதியில் விட்டு விடும் அபாயம் உள்ளது..

    Group A கதைகள் படித்தீர்களா.. வாக்களிதீர்களா.. ?? இல்லையெனி படியுங்கள் , வாக்களியுங்கள்..
    வீ எம்

    ReplyDelete
  42. இரு கதைகளையும் எப்படியும் இனைக்கப் போகிறீர்கள் என்று நினைத்தேன் ,ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை.இணைப்பு மிகவும் அருமை,திருப்பம்,முடிவு எல்லாமே நச்சுன்னு இருக்குங்க, போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. /மிக அருமை அருட், சூப்பர் .. இரு கதைகளையும் எப்படியோ இனைக்க போகிறீர்கள் என்று தெரிந்துவிட்டாலும். . எப்படி எப்படி என்று ஆவலை தூண்டும் விதமாக இருந்தது... நீளம் தான் கொஞ்சம் அதிகம்..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்../

    கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வீ எம்.

    /ஒரு சின்ன அபாயம் (Risk). ஔர்மையான கதை எனினும் சற்று நீளமாக இருப்பதால், சிலர் பொறுமையின்று, பாதியில் விட்டு விடும் அபாயம் உள்ளது../

    சிறியதாக எழுதிய ஊடல் கதை அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. அதனால்தான் தொடர்கதைக்காக வைத்திருந்த இந்த கதை சிறுகதையயக சுருக்கி விட்டேன் :)

    /Group A கதைகள் படித்தீர்களா.. வாக்களிதீர்களா.. ?? இல்லையெனி படியுங்கள் , வாக்களியுங்கள்..
    வீ எம்/

    மூன்று கூருக்கும் வாக்களித்து விட்டேன் வீ எம். தங்களுக்கும் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  44. /இரு கதைகளையும் எப்படியும் இனைக்கப் போகிறீர்கள் என்று நினைத்தேன் ,ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை.இணைப்பு மிகவும் அருமை,திருப்பம்,முடிவு எல்லாமே நச்சுன்னு இருக்குங்க, போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்./

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க நித்தியானந்தம்.

    ReplyDelete
  45. ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது கதை.. அழகான முடிவு... கொஞ்சம் கூட ஆர்வம் குறையாமல் படிக்கிறா மாதிரி எழுதியிருக்கீங்க!

    *கைத்தட்டல்கள்*

    ReplyDelete
  46. / ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது கதை.. அழகான முடிவு... கொஞ்சம் கூட ஆர்வம் குறையாமல் படிக்கிறா மாதிரி எழுதியிருக்கீங்க!/

    ரொம்பவும் நன்றிங்க girl of destiny!!!

    /*கைத்தட்டல்கள்*/

    _/\_ வணக்கங்கள் _/\_

    ReplyDelete
  47. நல்லாருந்தது. புதுமையான சொல்முறை.

    அப்புறம்....பின்னூட்டமிடனும்னா அது மேல நகட்டவும்னு போட்டிருக்கியே. அத எடுப்பா...தொல்லையா இருக்குது. வலைப்பூவுக்கு ஒரு ஸ்க்ராலு, பின்னூட்டத்துக்கு இன்னொரு ஸ்க்ராலு...

    ReplyDelete
  48. கதையின் நீளம் அலுப்பைத் தந்தாலும், இரு கோடுகள் எப்படி இனையும் என்ற ஆவலுடன் ஓட்டி..ஓட்டி..படித்ததில்...கதை நச்சென்று இருந்தது....

    ReplyDelete
  49. --நல்லாருந்தது. புதுமையான சொல்முறை.--

    நன்றிங்க ராகவன்!!!

    --அப்புறம்....பின்னூட்டமிடனும்னா அது மேல நகட்டவும்னு போட்டிருக்கியே. அத எடுப்பா...தொல்லையா இருக்குது. வலைப்பூவுக்கு ஒரு ஸ்க்ராலு, பின்னூட்டத்துக்கு இன்னொரு ஸ்க்ராலு...--

    வசதினு நெனச்சுதான் பின்னூட்ட பொட்டிய பதிவுக்கு கீழக் கொண்டு வந்தேன். அதுவே தொல்லையா இருக்குதா? இப்போ தூக்கிட்டேன்…:)
    நானும் வேர்ட்ப்ரசுக்கு மாறிடலாம்னு பாக்குறேன்…

    ReplyDelete
  50. --கதையின் நீளம் அலுப்பைத் தந்தாலும், இரு கோடுகள் எப்படி இனையும் என்ற ஆவலுடன் ஓட்டி..ஓட்டி..படித்ததில்...கதை நச்சென்று இருந்தது....--

    நீளம்தான் என்று எழுதும்போதே தோணியது. ஆனால் இதைவிட சுருக்கமாக எழுத எனக்கு இன்னும் எழுத்து கைவரவில்லை. முடிவில் கதை நன்றாக முடிந்ததில் திருப்தியே :)

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க tamilnadu born confused Dravidian :)

    ReplyDelete
  51. dont wory,

    na ungaluku than vote panerukan


    ram kumar

    ReplyDelete
  52. refreshingly nice and the narrative was superb...Keep it up..!

    ReplyDelete
  53. சொன்ன நேர்த்தி, கதை எல்லாமே அமர்க்களம். நன்றி

    ReplyDelete
  54. -- Very nice ... YOU WILL WIN!--
    மிக்க நன்றி சுரேகா!!!

    -- dont wory,

    na ungaluku than vote panerukan


    ram kumar --

    ராம் , தேர்தல் முடியறவரைக்கும் யாருக்கு வாக்களிச்சோம்னு வெளிய சொல்லக் கூடாதுப்பா ;-)
    நன்றி !!!

    -- refreshingly nice and the narrative was superb...Keep it up..! --
    சிவா, வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க!!!

    -- Excellent .... --
    நன்றி கௌசல்யா!!!

    -- சொன்ன நேர்த்தி, கதை எல்லாமே அமர்க்களம். நன்றி --
    கருத்துக்கு நன்றி பாலா!!!
    முதற் கூரின் கதைகளைப் போல பிற கூர்களின் கதைகளுக்கும் விமர்சனம் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன் ;-)

    ReplyDelete
  55. இந்த முடிவை ஏதிர் பார்க்கவில்லை,ஆனாலும், 'நச்' நல்லா இருக்குங்க .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  56. நல்லகதை...திருப்பம் நச்.....இரண்டு கதைகளும் இணைத்த விதம் அருமை...வாழ்த்துகள்

    ReplyDelete
  57. / இந்த முடிவை ஏதிர் பார்க்கவில்லை,ஆனாலும், 'நச்' நல்லா இருக்குங்க .வாழ்த்துக்கள்/

    எதிர்பாராத மாதிரிதான முடிக்கனும்? :)
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க குட்டி

    ReplyDelete
  58. /நல்லகதை...திருப்பம் நச்.....இரண்டு கதைகளும் இணைத்த விதம் அருமை...வாழ்த்துகள்/

    நன்றிங்க பாசமலர்!!! வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!

    ReplyDelete
  59. நல்லா ரீச் ஆகியிருக்கேன் போல.. :)

    கும்மு கும்முன்னு கும்முறாங்க போல வாக்கு..வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

    ///*முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க tamilnadu born confused Dravidian :)முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க tamilnadu born confused Dravidian :)//

    ReplyDelete
  60. சான்ஸே இல்ல. கலக்கிட்டீங்க. ரொம்ப அழகா கதை சொல்லி இருந்தீங்க.நான் என்னவோ சென்னை காதலையும் திருச்சி காதலையும் ஒப்பிட்டு ஏதோ லியோனி மாதிரி சொல்ல போறீங்கன்னு பார்த்தேன். என் வோட்டு உங்களுக்கு தான். வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  61. //சுரேகா.. said...
    Very nice ... YOU WILL WIN!
    //

    சுரேகாதான் உறுதியாக சொல்லியிருக்காரு..
    நன்றி சொல்லிடுங்க...

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள்!

    Click here to view results

    surveysan2005 at yahoo.com ல் தொடர்பு கொள்ளவும்! :)

    ReplyDelete
  63. வாழ்த்துகள் அருட்பெருங்கோ...

    ReplyDelete
  64. வெற்றிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  65. வாழ்த்துகள் அருட்பெருங்கோ...

    அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை. வெற்றிப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ அவர்களே.

    வீ எம்

    ReplyDelete
  66. அருமையான நச்சென்ற கதை.... வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள் ஐயா... எல்லாருக்கும் தெரிந்த முடிவு தான்.... :) :)
    சுபா பிரேம்குமார்.........

    ReplyDelete
  68. /நல்லா ரீச் ஆகியிருக்கேன் போல.. :)/
    :) கண்டிப்பா…

    /கும்மு கும்முன்னு கும்முறாங்க போல வாக்கு..வெற்றிப் பெற வாழ்த்துக்கள்/
    மெய்ப்படுத்திய வாழ்த்துகளுக்கு நன்றிங்க tbcd!!!

    ReplyDelete
  69. /சான்ஸே இல்ல. கலக்கிட்டீங்க. ரொம்ப அழகா கதை சொல்லி இருந்தீங்க.நான் என்னவோ சென்னை காதலையும் திருச்சி காதலையும் ஒப்பிட்டு ஏதோ லியோனி மாதிரி சொல்ல போறீங்கன்னு பார்த்தேன். என் வோட்டு உங்களுக்கு தான். வெற்றி பெற வாழ்த்துக்கள்!/

    ரொம்ப நன்றிங்க சத்தியா. காதல்ல என்னங்க ஒப்பீடு? எல்லாக் காதலும் நல்ல காதல் தான்!!! (கொஞ்சம் கேப் கிடைச்சாலும் கருத்து சொல்லுவோம் ;-))
    அந்த 65ல நீங்களும் ஒருத்தரா? :) நன்றி நன்றி

    ReplyDelete
  70. /சுரேகாதான் உறுதியாக சொல்லியிருக்காரு..
    நன்றி சொல்லிடுங்க.../

    ஆமாங்க அறிவன். முடிவை முன்கூட்டியே தெரிவித்த சுரேகாவுக்கு சிறப்பு நன்றிகள் :) அதனை நினைவுபடுத்திய அறிவனுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  71. /வாழ்த்துக்கள்!

    Click here to view results

    surveysan2005 at yahoo.com ல் தொடர்பு கொள்ளவும்! :)/

    நன்றி சர்வேசன். உங்களுக்கு மடலனுப்பியிருக்கேன்.

    ReplyDelete
  72. -- வாழ்த்துகள் அருட்பெருங்கோ... --

    நன்றி சன்னி!

    -- வெற்றிக்கு வாழ்த்துகள் --

    நன்றிங்க பாசமலர்!

    -- வாழ்த்துகள் அருட்பெருங்கோ...

    அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை. வெற்றிப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ அவர்களே.

    வீ எம் --

    நன்றிங்க வீ எம். ‘அவர்களே’ எல்லாம் வேண்டாம்ங்க :)


    -- அருமையான நச்சென்ற கதை.... வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் --

    நன்றிங்க சார்லஸ்!!!

    -- வாழ்த்துக்கள் ஐயா... எல்லாருக்கும் தெரிந்த முடிவு தான்.... :) :)
    சுபா பிரேம்குமார்......... --

    ஐயாவா? :) வாழ்த்துகளுக்கு நன்றிங்க!!!

    ReplyDelete
  73. வெற்றி
    பெற்றதற்கு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. அருமையான நச்சென்ற கதை.... வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. கதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    - சகாரா.

    ReplyDelete
  76. fantastic!!!!

    கதை சொன்ன விதம் அருமையிலும் அருமை. ரொம்ம்ப்ப்ப பிடிச்சிருந்தது. (வெற்றிக்கும்) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  77. என்னுடைய வாழ்த்துக்களை தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்.
    இங்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  78. சூப்பர் கதை!
    போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  79. நீங்க ஒரு அருமையான கதை சொல்லி.
    நச்சு,ட்விஸ்ட்டு எல்லாத்தையும் விட சொல்லிய விதம் தான் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  80. dear arul,

    jecetega pola, treat alam kedaitha


    ram kumar

    ReplyDelete
  81. Migavum arumai.. manathai nerudum kathai..

    ReplyDelete
  82. -- வெற்றி
    பெற்றதற்கு
    வாழ்த்துக்கள்.—

    நன்றி சிவா!!

    / அருமையான நச்சென்ற கதை.... வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் /
    நன்றி சு.கோ. பெரிய தலைங்க நீங்க எல்லாம் இல்லாததால நாங்க வந்துட்டோம் :-)

    / கதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    - சகாரா./
    நன்றிங்க சகாரா!!

    / fantastic!!!!

    கதை சொன்ன விதம் அருமையிலும் அருமை. ரொம்ம்ப்ப்ப பிடிச்சிருந்தது. (வெற்றிக்கும்) வாழ்த்துக்கள்!/
    நன்றிங்க டுபுக்கு. இந்த கதையெழுதின கதைதான் சொல்லியிருக்கேனே, நண்பர்கள் தான் காரணம் :)

    / என்னுடைய வாழ்த்துக்களை தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்.
    இங்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்./
    ஆகா… ரொம்ப நன்றிங்க நக்கீரரே.

    / சூப்பர் கதை!
    போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!! :-)/
    வாழ்த்துகளுக்கு நன்றிங்க காதல் விஞ்ஞானி :)

    / நீங்க ஒரு அருமையான கதை சொல்லி.
    நச்சு,ட்விஸ்ட்டு எல்லாத்தையும் விட சொல்லிய விதம் தான் சூப்பரா இருக்கு./
    ரொம்ப நன்றிங்க அ.ஆ!!! இது ஒரு தொடர்கதையாக எழுத நினைத்து சுருக்கப்பட்ட சிறுகதைதான்!

    / dear arul,

    jecetega pola, treat alam kedaitha


    ram kumar/
    ராம் குமார்,
    ஹைதராபாத் வாங்க விருந்து வச்சிடலாம் :)

    / Migavum arumai.. manathai nerudum kathai../
    நன்றிங்க மாறன்!!! மனதை நெருடுதா? புரியலையே :(

    ReplyDelete
  83. அருட்பெருங்கோ..

    இன்னைக்குத்தான் படிச்சேன். ரெம்ப நல்லாயிருந்துச்சு கதை. பொறாமப் பட வச்சிட்டீங்க.
    :)

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  84. அருமையா இருக்கு! எதிர்பார்க்காத முடிவு.

    ReplyDelete
  85. Arutperungo..this is the first story I read from your blog..It is very good..Till I finished the story I was actually expecting that you are saying what happens in chennai and tiruchy..Nice...

    ReplyDelete
  86. காதல் முரசே.. கதையும் அருமை.. போட்டியில் வெற்றிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  87. @ சிறில் அலெக்ஸ்,

    பொறாமப் பட வைக்கிற அளவுக்கெல்லாம் இல்லீங்க சிறில். வித்தியாசமா எழுதிப் பாக்கலாம்னு ஒரு முயற்சி அவ்வளவுதான்.

    நன்றி.

    @ அப்பாவி,

    நன்றிங்க அப்பாவி!!!

    @கார்த்திகேயன்,

    நன்றிங்க கார்த்திகேயன். மற்ற கதைகளையும் வாசித்துப் பாருங்கள்!

    @தேவ்,

    நன்றிங்க தல…

    @dolby,

    Its tamil Unicode font… try Arial Unicode MS… view in the browser by selecting the encoding as ‘unicode’

    ReplyDelete
  88. it is pretty good arul though i could guess that two stories are going to be related. (Since i read a lot of novels during my schooling)
    Good One...

    ReplyDelete
  89. Excellent Story. Hats off !! :)

    ReplyDelete
  90. hi arul,
    story s very nice....Really superb.

    ReplyDelete
  91. Story is really nice ...

    ReplyDelete
  92. @பதி
    நன்றிங்க… கண்டிப்பா ரெண்டு கதையும் இணைச்சுதான் ஆகனும் இல்லனா தனித் தனி கதையாவே சொல்லிடலாமே!

    @மேடி,
    நன்றிங்க மேடி!!

    @சங்கரி,
    நன்றிங்க சங்கரி!!

    @அனானி,
    நன்றிங்க அனானி!!

    ReplyDelete
  93. ஒரு காதல் ஒரு கொலை... அநியாயமா ஒரு ஆளை accidentla சாக அடிச்சிட்டியே அப்பு?
    -பரதன

    Barathan

    ReplyDelete
  94. Fantastic...

    நன்று!

    இது வெறும் கதையா இல்லை உண்மை சம்பவமா?

    ReplyDelete
  95. மிகவும் அருமையாக இருக்கிறது அருட்பெருங்கோ. மனம் நெகிழ்ந்துவிட்டேன்

    ReplyDelete
  96. Arutperungo,

    Romba nallaa irunthuthu kathai.
    I enjoyed reading it.
    Congrats.

    C.N.Raj.

    ReplyDelete
  97. @பரதன்,
    அது கொலையல்ல பரதன். அது ஒரு விபத்து :) நூறாவது பின்னூட்டத்திற்கு நன்றிகள்!

    @மாதரசன்,
    கதைதான் மாதரசன். வாழ்த்துக்கு நன்றி!

    @ப்ரசன்,
    நன்றிங்க ப்ரசன் பாராட்டுகளுக்கு.

    @சி.என். ராஜ்,
    வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க ராஜ்!!!

    ReplyDelete
  98. boss.... this story made an impact.. its stronger 'coz of the fact that am also from BIM trichy....

    ReplyDelete