ஊடலும் காமத்துக்கின்பம்னு வள்ளுவர் சொல்றாராம். அவருக்கென்னங்க சொல்றது ஈசியா சொல்லிட்டுப் போயிட்டார். அனுபவிக்கிறவனுக்குதான் அதோட கஷ்டம் தெரியுது. ஒருவேளை ஊடல் முடிஞ்ச பின்னாடி அது இன்பமா தெரியறத அவர் சொல்லியிருக்கலாம்.ஆனா ஊடல் நடக்கும்போது அது இன்பமாவா இருக்கு? நரக வேதனைங்க. ஆளையேக் கொல்ற அவஸ்தைதான். அதுவும் பேசாம இருந்து, ஆண்கள அலைய விடுறதுல இந்த பெண்களுக்கு அப்படியென்னதான் சுகமோ தெரியல. இப்படியெல்லாம் பொதுவா எல்லாப் பெண்களையும் தப்பாப் பேசக்கூடாதுதான். நானும் எல்லாப் பெண்களையும் சொல்லலைங்க. காதலிக்கிற, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்கள மட்டும் தான் சொல்றேன்.
இப்ப மணி ஆறு ஆகுது. அவ என் கூடப் பேசி முழுசா ரெண்டு நாள் முடியப் போகுது. காதலிச்ச காலத்துலயும் சரி கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சரி இந்த மாதிரி நெறைய தடவ கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்திருக்கா. ஆனா எப்பவும் தொடர்ந்து ஒரு நாளைக்கு மேல பேசாம இருந்ததில்ல. இந்த தடவதான் இப்படி ரெண்டு நாளா என்னக் கொன்னுகிட்டு இருக்கா. இத்தனைக்கும் கோவிச்சுட்டுப் பேசாம இருக்கிற அளவுக்கு நான் பெரிய தப்பு எதுவும் பண்ணல. அன்னைக்கு சாதாரணமாதான் பேசிட்டு இருந்தோம். ஏதோ பேச்சு வாக்குல தெரியாத் தனமா அந்தப் பழமொழிய சொல்லிட்டேன். தேன் விக்கறவன் புறங்கைய நக்காமலா இருப்பான் அப்படின்னு. இதுல என்ன பிரச்சினைன்னா அவங்க அப்பாவும் பெரிய அளவுல தேன் வியாபாரம் தான் பண்றார். நான் வேணும்னே அவங்கப்பாவ கிண்டல் பண்றதுக்காக தான் அப்படி சொன்னேன்னு நெனச்சுக் கோவிச்சுக்கிட்டுப் பேச மாட்டேங்கறா. இந்தப் பொண்ணுங்க கிட்ட மட்டும் அவங்க பிறந்த வீட்டப் பத்தி தெரிஞ்சோ தெரியாமலோ சின்னதா கிண்டல் பண்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டாப் போதும்; கோபம் சுள்ளுனு வந்துடுது. அதுக்கப்புறம் நாம தலகீழா நின்னாலும் ஒன்னும் நடக்காது.
நான் அவளக் காதலிச்சது, கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுவுமே அப்போ எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. நாங்களும் அவங்களும் வெவ்வேற சாதியாப் போயிட்டோம். அதுவுமில்லாம என்னோட அண்ணனுக்கே அப்போ கல்யாணம் ஆகாம இருந்தது. ( இன்னும் ஆகலங்கறது வேற விசயம் ). சூழ்நிலை இப்படி இருக்கும்போது அன்னைக்கு எங்க வீட்ல இந்த விசயத்த சொல்ற நிலமைல நான் இல்ல. அதனால அவங்க வீட்ல மட்டும் சம்மதம் வாங்கிட்டு திருத்தணில ரொம்ப சிம்பிளா கல்யாணத்த முடிச்சுக்கிட்டோம். அதுக்கே நான் அவங்கப்பாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். இப்படியிருக்கும்போது நானே அவங்கப்பாவ கிண்டல் பண்ணேன்னு அவ நெனச்சுக்கிட்டதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு
அவளுக்கு நல்ல குரல் வளம்ங்க. பாடினா நாள் பூரா கேட்டுகிட்டே இருக்கலாம். ம்ஹும்… இன்னைக்குப் பேசுறதுக்கே வழியக் காணோம். பாட்டெல்லாம் டூ மச் தான். இன்னைக்குனு பாத்து நானும் வடபழனி ஆபிசுக்கு வரவேண்டியதாப் போச்சு. இங்க கஸ்டமர் சைட்ல இருந்து இஸ்யூஸ் அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கு. அவங்க எதுவுமே பண்ணாம எந்தப் பிரச்சினைனாலும் எல்லாத்துக்கும் நம்மகிட்டவே வர்றாங்க. நானும் முடிஞ்ச வரைக்கும் சால்வ் பண்ணிகிட்டுதான் இருக்கேன். ஆனா இவங்களுக்கு இதுவே பழக்கமாப் போச்சு. கொஞ்ச நேரம் கூட நம்ம பெர்சனல் மேட்டர பாக்க விட மாட்டேங்கறாங்க. இருங்க. ஏதோ சத்தம் கேட்குது. அடுத்த கஸ்டமர் கால் னு நெனைக்கிறேன்.
“முருகா… நேத்துல இருந்து என்னோட இளா என்கூட பேச மாட்டேங்கறா! நீ தான் அவ கோபத்த
தீர்த்து என்கூட பேச வைக்கனும். உன்ன தான் மல போல நம்பியிருக்கேன்”
நானே ரெண்டு நாளா வள்ளி என் கூட பேச மாட்டேங்கறான்னு உங்ககிட்ட பொலம்பிகிட்டு இருக்கேன். இவரு எங்கிட்ட வந்து பொலம்புறாரு. காதலிச்சா ஆண்டவனுக்கே இந்த நிலமதான்னு இவருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.
---------
இந்தக் கதையை சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு அனுப்பலாமானு சொல்லுங்க நண்பர்களே!!!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இது கதையென்று நீங்கள் கடைசி வரியில் கூறிய பின் தான் தெரிந்தது.
ReplyDeleteஉண்மை சம்பவம்/நிகழ்வு என்றே நினைத்தேன், அவ்வளவு அழகான நடை........ஆனால் 'நச்சுன்ன்னு ஒரு கதை' அப்படின்ற தலைப்பில் உள்ள போட்டிக்கு நீங்கள் இதைவிட இன்னும் சுவாரஸியமாக எழுதலாமோ என்று கருதுகிறேன்!
sooperu enaku ennamo unga mela doubt a iruku :)
ReplyDeleteஅனுப்பலாம், நன்றாக இருக்கிறது!
ReplyDelete/அனுப்பலாம், நன்றாக இருக்கிறது!/
ReplyDeleteநன்றி குசும்பன். இன்னும் நல்லா வேற கதை யோசிக்கனும். முடியலன்னா இதையே அனுப்பலாம் :-)
Unga thiramykku edhu romba kammi. Ennum nalla yosikilame.
ReplyDeleteKadhal kudam pakkam neengal thirumbavellai. En endru ketkalama?
கதை மிக்க அருமை!!! முடிவை படித்தவுடன் மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தூண்டியது! :-)
ReplyDelete/ இது கதையென்று நீங்கள் கடைசி வரியில் கூறிய பின் தான் தெரிந்தது.
ReplyDeleteஉண்மை சம்பவம்/நிகழ்வு என்றே நினைத்தேன், அவ்வளவு அழகான நடை........ஆனால் 'நச்சுன்ன்னு ஒரு கதை' அப்படின்ற தலைப்பில் உள்ள போட்டிக்கு நீங்கள் இதைவிட இன்னும் சுவாரஸியமாக எழுதலாமோ என்று கருதுகிறேன்!/
நன்றி திவ்யா.
இன்னும் இந்தக் கதையை போட்டிக்கு அனுப்பவில்லை. வேறு எதுவும் தோன்றாத பட்சத்தில் இதையே அனுப்பலாம்.
/sooperu enaku ennamo unga mela doubt a iruku :)/
ReplyDeleteகா. பி. சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீங்க :-)
/Unga thiramykku edhu romba kammi. Ennum nalla yosikilame.
ReplyDeleteசஞ்சீவ் அண்ணே. நம்ம மூளைக்கு எட்டினது இவ்வளவுதான். :(
/Kadhal kudam pakkam neengal thirumbavellai. En endru ketkalama?/
அத ஏன் காதல் மாசம் வரைக்கும் தள்ளிப் போடக்கூடாதுனு நானும் கேட்கலாமா? ;-)
சூப்பர் , நல்ல கதை.. ஆனா போட்டிக்கு ஏற்ற மாதிரி நச்சுனு ஒரு திருப்பம் இல்லை நன்பரே...
ReplyDelete/ கதை மிக்க அருமை!!! முடிவை படித்தவுடன் மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தூண்டியது! :-)/
ReplyDeleteஅப்படியா? நன்றிங்க!!! முதல் வரவுக்கும்.
/ சூப்பர் , நல்ல கதை.. ஆனா போட்டிக்கு ஏற்ற மாதிரி நச்சுனு ஒரு திருப்பம் இல்லை நன்பரே.../
ReplyDeleteமுருகக்கடவுள் தான் பொலம்பறாருனு முன்னாடியே யூகிச்சுட்டீங்களா? :-(
எனக்கு ரொம்ப பிடிச்சது :)
ReplyDeleteஎல்லாரும் இதுக்காக ரொம்ப சீரியஸான தலைப்புகளிலேயே எழுதுரப்போ நீங்க நகைச்சுவையா சொன்னது அருமை
ரொம்ப நல்ல இருக்குங்க...
ReplyDeleteஆனா அநியாயத்துக்கு முருகன பொலம்பவிட்டுட்டிங்க :)
இதையே அனுப்பலாம் என்னோட கருத்து :)
/ எனக்கு ரொம்ப பிடிச்சது :)/
ReplyDeleteஉங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல? ;)
/எல்லாரும் இதுக்காக ரொம்ப சீரியஸான தலைப்புகளிலேயே எழுதுரப்போ நீங்க நகைச்சுவையா சொன்னது அருமை/
ஏம்ப்பா…. முருகப் பெருமான் எவ்வளவு சீரியசா பொலம்பறார். நீங்க நகைச்சுவை னு சொல்றீங்க….
/ரொம்ப நல்ல இருக்குங்க... /
ReplyDeleteநன்றி கோபால்.
/ஆனா அநியாயத்துக்கு முருகன பொலம்பவிட்டுட்டிங்க :)/
முருகன புலம்ப விட்டது அவரோட காதல் மனைவி வள்ளி. நானில்ல ;-)
/இதையே அனுப்பலாம் என்னோட கருத்து :)/
இன்னும் அவகாசம் இருக்கே. பொறுத்திருப்போம்.
/கதைன்னு சொன்னீங்கன்னா-- சுமார்தான்./
ReplyDeleteம்ம்ம் கதைதான் மேடம். அடுத்த கதைய இன்னும் நல்லா எழுதப் பாக்கறேன்
Hi Arutperungo Manohar,
ReplyDeleteRealy very Superb pa kandippa neenga yarayo love panrenganu mattum nalla thariyuthu, she is very lucky, All the best for ur Future........
Devisri
/Hi Arutperungo Manohar,
ReplyDeleteRealy very Superb pa/
நன்றிங்க தேவி.
/ kandippa neenga yarayo love panrenganu mattum nalla thariyuthu, she is very lucky, All the best for ur Future......../
எனக்கு அழுவதா சிரிப்பதா னு தெரியல… சரி விடுங்க :)
Kathai romba arumai..sure send it to the competition...
ReplyDelete/ Kathai romba arumai..sure send it to the competition.../
ReplyDeleteநன்றி ஆர்.கே…. வருகைக்கும் ஊக்கத்திற்கும்!!!
நல்லா இருக்கு நண்பரே..
ReplyDeleteவள்ளுவரை மிஞ்சிட போறீங்க :-)
அங்க அவருக்குதான் ஒரு 'ஸ்டேண்ட்பை' இருக்கே நீ உன் ஆளை சமாதானம் பண்ற வழியை பாரு சிவசாம்ராஜ்!!!!
ReplyDelete//
எனக்கு அழுவதா சிரிப்பதா னு தெரியல… சரி விடுங்க :)
//
கதைன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்!!!!
/ நல்லா இருக்கு நண்பரே..
ReplyDeleteவள்ளுவரை மிஞ்சிட போறீங்க :-)/
நன்றி கருணா!!! அவரு எல்லாரையும் மிஞ்சின ஆளுங்க…நாமல்லாம் எந்த மூலை?
/அங்க அவருக்குதான் ஒரு 'ஸ்டேண்ட்பை' இருக்கே நீ உன் ஆளை சமாதானம் பண்ற வழியை பாரு சிவசாம்ராஜ்!!!!
ReplyDelete//
எனக்கு அழுவதா சிரிப்பதா னு தெரியல… சரி விடுங்க :)
//
கதைன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்!!!!/
:-((((( எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா???? நல்லாருங்க!!!
டைரி'லே இருக்கிறதெய்யல்லாம் பதிவா போட ஆரம்பிச்ச்சா... குட் குட்... :)
ReplyDelete/டைரி'லே இருக்கிறதெய்யல்லாம் பதிவா போட ஆரம்பிச்ச்சா... குட் குட்... :)/
ReplyDeleteயோவ் ராயலு… இது முருகனோட டைரிய்யா…. நல்லாப் படி :-)
சூப்பர் கதைய்யா...ஆமா இதை நம்மக்கிட்ட சொல்லவேல்ல பார்த்தியா! ;))
ReplyDeleteநல்லாயிருய்யா..!
/ சூப்பர் கதைய்யா...ஆமா இதை நம்மக்கிட்ட சொல்லவேல்ல பார்த்தியா! ;))
ReplyDeleteநல்லாயிருய்யா..!/
மாப்பி, நீ ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டனு நெனைக்கிறேன். இது ஒரு புனைவு தான்!!!