பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
"சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?
யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
செல்பேசிகள் இரண்டும்!
"எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?"
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்...
ம்ம்ம்...எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
கோபம்...
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
நல்ல கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்
கடைசியாகச் சொல்லியிருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை மிக அருமை. ரசித்தேன்.
ReplyDelete// "சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
இரண்டல்ல இதயங்கள்
ஒன்றென்றாய்
இன்று இரண்டானது எப்படி?
/நல்ல கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் /
வாழ்த்துக்களுக்கு நன்றி விசாகன்!!!
தொடர்ந்து வாசிங்க...
வாங்க ராகவன்,
ReplyDelete/கடைசியாகச் சொல்லியிருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை மிக அருமை. ரசித்தேன்./
ம்ம்ம் நன்றி :)
// "சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
இரண்டல்ல இதயங்கள்
ஒன்றென்றாய்
இன்று இரண்டானது எப்படி? //
ஒன்றாய்ச் சிந்திக்கும் இரண்டு இதயங்கள் ;)
அழகான வரிகள் அருள்
ReplyDelete\\யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
செல்பேசிகள் இரண்டும்!\\
இன்னும் அழகாக இருக்கு ;-))
அழகான கவிதைகள் அருட்பெருங்கோ.....
ReplyDelete//கோபம்...
ReplyDeleteசூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!//
நல்ல உவமை அருட்பெருங்கோ.
எனக்கு புரிந்தும் புரியாதது மாதிரி இருக்கு :(
\\யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
செல்பேசிகள் இரண்டும்!\\
இன்னும் அழகாக இருக்கு ;-))
அதே :)
//என் பெயரை
ReplyDeleteதமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
யோவ் அருட்ஸ், இதெல்லாம் ரொம்பவும் ஓவருய்யா. திறமையால் இப்படி சாவடிக்கறீங்களே! ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்க.
//"சுற்றுலா போக என்னவெல்லாம்
ReplyDeleteஎடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
நல்ல வரிகள்... ரசிக்கும் படி இருக்கு கவிதை...
வாங்க காதல் முரசு,
ReplyDeleteநீண்ட இடைவேளைக்கு பின்பு கவிதை(கள்) மழை பொழிந்திருக்கிறது.
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
அழகான கற்பனை :-)
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
(அப்பாடல்க(ள்)ளில் மயங்கி தவிக்கிறோம் நாங்கள்)
வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய எதிர் நோக்கி காத்துக்கிடக்கிறோம்
//
ReplyDelete"சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
ம்ம்ம், காலங்காலமா இப்படித்தானே திரைப்படத்தில் கதா நாயகனும் நாயகியும் டூயட் பாடுறாங்க
//என் பெயரை
ReplyDeleteதமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது//
அசத்தல்!!!
~சேரன்
"சுற்றுலா போக என்னவெல்லாம்
ReplyDeleteஎடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?"
காதலின் பொருத்தத்தை அழகாக சொல்லியிருக்கீங்க
"அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!"
அபாரமான கற்பனை.
"என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!"
அருமை
yellame romba azhaga irruku.....
ReplyDelete// "சுற்றுலா போக என்னவெல்லாம்
ReplyDeleteஎடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
//என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
ஐயா சீக்கிரமாக arutperungo.com-ஐ திரந்து விடுங்க
கேட்டா நேரம் போகாம எழுதுறேன்னு சொல்லூவீங்க
வெருமென நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போக முடியல
எல்லாதையும் ஒரு கோப்பா எடுத்து வச்சிருக்கேன்
இது இந்த ஒரு வாரதுக்கு போதும். சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பர்க்கும்
தங்களது சகோதரன்
மதுரையில் இருந்து மீறான் அன்வர்
HAI.....I'M UMA...I'M NEW TO THIS SITE.....BUT ITS SIMPLY SUPERB...I LOVE EVERY LINE....PLZ CONTINUE TO GIVE MORE "KAVETHAI" LIKE THIS.......
ReplyDelete//என் பெயரை
ReplyDeleteதமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள் ...
./பழனி
வாங்க கோபி,
ReplyDelete/ அழகான வரிகள் அருள்/
நன்றிகள்!!!
\\யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
செல்பேசிகள் இரண்டும்!\\
இன்னும் அழகாக இருக்கு ;-))/
நல்ல மாடல் செல்போன்களா இருக்கும் ;-)
@ ராம்,
ReplyDelete/அழகான கவிதைகள் அருட்பெருங்கோ...../
நன்றி!!!
@ கதிரவன்,
/ //கோபம்...
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!//
நல்ல உவமை அருட்பெருங்கோ.
எனக்கு புரிந்தும் புரியாதது மாதிரி இருக்கு :(/
சுடும் நிலா னு சொன்னேன் அவ்வளவுதான் :)
\\யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன...
செல்பேசிகள் இரண்டும்!\\
இன்னும் அழகாக இருக்கு ;-))
அதே :)/
அதே நன்றி இங்கேயும் :)
வாங்க மாசிலா,
ReplyDelete/ //என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
யோவ் அருட்ஸ், இதெல்லாம் ரொம்பவும் ஓவருய்யா. திறமையால் இப்படி சாவடிக்கறீங்களே! ரூம் போட்டு யோசிப்பீங்களோ?/
தல, விட்டா தேடி வந்து அடிப்பீங்க போல :)
கணினிய மொறச்சுக்கிட்டே யோசிக்கிறதுதான் ;)
பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடர்க./
கண்டிப்பா...
//"சுற்றுலா போக என்னவெல்லாம்
ReplyDeleteஎடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
நல்ல வரிகள்... ரசிக்கும் படி இருக்கு கவிதை...//
நன்றி கவி ரூபன்...
வாப்பா பிரேம்,
ReplyDelete/ வாங்க காதல் முரசு,
நீண்ட இடைவேளைக்கு பின்பு கவிதை(கள்) மழை பொழிந்திருக்கிறது./
ம்ம்ம் நக்கல் தான வேணாங்கறது...
/என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!
அழகான கற்பனை :-)/
அட கற்பனை இல்லப்பா நெசமாத்தான் ;)
/பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
(அப்பாடல்க(ள்)ளில் மயங்கி தவிக்கிறோம் நாங்கள்)/
அது சரி... எந்த அர்த்தத்துல சொல்லிருக்கீங்களோ தெரியல :)
வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய எதிர் நோக்கி காத்துக்கிடக்கிறோம்/
நன்றி நன்றி நானும் எழுதனும்னுதான் பாக்கறேன் கம்பெனியில விட மாட்டேங்கறாங்களே...
/ //
"சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா? //
ம்ம்ம், காலங்காலமா இப்படித்தானே திரைப்படத்தில் கதா நாயகனும் நாயகியும் டூயட் பாடுறாங்க/
அங்க எப்பவுமே ஒரு இதயம் ஒரு கனவு தான்... நான் சொன்னது ரெண்டு இதயம் சேர்ந்து ஒரு கனவு :)
@ சேரன்,
ReplyDelete/ //என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது//
அசத்தல்!!!
~சேரன்/
நன்றீ :)
@ சூர்யா,
/ "சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?" - அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?"
காதலின் பொருத்தத்தை அழகாக சொல்லியிருக்கீங்க/
காதலப் பத்தி என்ன சொன்னாலும் அழகுதானே?
/"அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!"
அபாரமான கற்பனை./
:) நன்றி
/"என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!"
அருமை/
மீண்டும் நன்றி!!!
@ அனானி,
/ yellame romba azhaga irruku...../
உங்களுக்கும் நன்றிங்க!!!
@ அன்வர்,
ReplyDelete/ஐயா சீக்கிரமாக arutperungo.com-ஐ திரந்து விடுங்க
கேட்டா நேரம் போகாம எழுதுறேன்னு சொல்லூவீங்க
வெருமென நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போக முடியல
எல்லாதையும் ஒரு கோப்பா எடுத்து வச்சிருக்கேன்
இது இந்த ஒரு வாரதுக்கு போதும். சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பர்க்கும்
தங்களது சகோதரன்
மதுரையில் இருந்து மீறான் அன்வர்/
சரிங்கண்ணா... சீக்கிரமே பண்ணிடறேன்...
தொடர்ந்த வாசிப்புக்கு நன்றிகள்!!!
@ உமா,
/ HAI.....I'M UMA...I'M NEW TO THIS SITE.....BUT ITS SIMPLY SUPERB...I LOVE EVERY LINE....PLZ CONTINUE TO GIVE MORE "KAVETHAI" LIKE THIS......./
ரொம்ப நன்றிங்க... கண்டிப்பா தொடர்ந்து எழுதறேன்!!!
@ பழனி,
//என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!//
அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள் ...
./பழனி //
நன்றி பழனி... தொடர்ந்து வாசிங்க!!!