Friday, November 10, 2006

கொடுமைக் காரி நீ!

உனக்கான முதல் கவிதை
எழுதப்படவில்லை...
அது உனக்கே சூட்டப்பட்டது!

***************************************

என் கவிதைகளின் கரு நீ!
உன் கனவுகளின் உரு நான்!

***************************************

நம் கண்களின் சந்திப்பு
காதலை சொல்லும்…
நம் கனவுகளின் சந்திப்பு?

***************************************

நான் எழுதுகையில் உருவத்தையும்
நீ வாசிக்கையில் உயிரையும்
பெறுகின்றன, என் கவிதைகள்!

***************************************

இது என்ன வகை பண்டமாற்றம்?
மனதைக் கொடுத்து விட்டு
மனதையே எடுத்துப் போகிறாய்…

***************************************

எத்தனைக் கவிதை எழுதினாலும்
உன் இதயத்தை என்னால்
திருட முடியவில்லை..
நீயோ ஒற்றைப் புன்னகையில்
என்னைக் கைது செய்து போகிறாய்!
திருடும் முன்னேக் கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!

10 comments:

  1. இது என்ன வகை பண்டமாற்றம்?
    மனதைக் கொடுத்து விட்டு
    மனதையே எடுத்துப் போகிறாய்

    ***************************************
    beautiful!
    shylaja

    ReplyDelete
  2. மூன்று வரிக்கு மிகாத கவிதைகள்.. நன்று

    ReplyDelete
  3. கொடுமைகாரன் நீங்க..ஆமா எப்படிங்க இப்படிலாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //இது என்ன வகை பண்டமாற்றம்?
    மனதைக் கொடுத்து விட்டு
    மனதையே எடுத்துப் போகிறாய்…//

    அழகு ..

    ReplyDelete
  5. /beautiful!
    shylaja /

    நன்றிகள்!!!

    ReplyDelete
  6. /நான் எழுதுகையில் உருவத்தையும்
    நீ வாசிக்கையில் உயிரையும்
    பெறுகின்றன, என் கவிதைகள்!/


    /எத்தனைக் கவிதை எழுதினாலும்
    உன் இதயத்தை என்னால்
    திருட முடியவில்லை..
    நீயோ ஒற்றைப் புன்னகையில்
    என்னைக் கைது செய்து போகிறாய்!
    திருடும் முன்னேக் கைது செய்யும்
    கொடுமைக்காரி நீ!/

    ம்ம் .கவிதை வரிகளில் பொங்குகிறது காதல். அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. /மூன்று வரிக்கு மிகாத கவிதைகள்.. நன்று /

    அப்போ கடைசி கவிதை மட்டும் நல்லால்லையா??? :))

    ReplyDelete
  8. /கொடுமைகாரன் நீங்க..ஆமா எப்படிங்க இப்படிலாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் /

    நல்லா இருக்குங்கறீங்களா? இல்ல
    நல்லா இல்லைங்கறீங்களா? ;)

    வந்து வாசித்ததுக்கு நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  9. /அழகு ../

    மணிபிரகாஷ்,
    வாசித்து பாராட்டியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. வாங்க தாரிணி,

    /ம்ம் .கவிதை வரிகளில் பொங்குகிறது காதல். அருமை.
    வாழ்த்துக்கள். /

    கவிதையில்லாமல் காதலா?
    காதல் இல்லாமல் கவிதையா?

    வாழ்த்துக்களுக்கு நன்றி!!!

    ReplyDelete