Thursday, December 15, 2005

நம்ம ஊர் நடு நெலமவாதி!


நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!
பிரச்சன என்னான்னா நம்ம மாமங்காரங் ஒரு ஆயிரம் ரூவாவ
மச்சாங்காரங்கிட்ட குடுத்து வச்சிர்ந்திருக்கான்.
இப்பத் திருப்பிக் கேட்டா மச்சாங்காரன் தர முடியாதுன்னுட்டான்.
சரி நம்ம நடு நெலமக் கார்ரு எப்பட்றா பிரச்சனயத்
தீக்கறார்னுப் பாத்தேன்.
நேரா மச்சாங்கிட்டப் போனவரு ஆயிரத்தையும் புடுங்குனாரு.
மாமங்கிட்ட ஐநூறு, மச்சாங்கிட்ட ஐநூறு எண்ணிக்
குடுத்துட்டுப் போய்ட்டாரு.
நாங் கேட்டதுக்குச் சொல்றாரு :
"ரெண்டுப் பக்கமும் பிரச்சினப் பண்ணிக்கக் கூடாதில்ல - அதாம்ப்பா".

நாங் என்னாச் சொல்றன்னா நாயம்னு தெரிஞ்சா அந்தப்
பக்கஞ் சாஞ்சிட வேண்டியதுதான? இதுல என்னா வெக்கம்?

என்னங்க நாஞ் சொல்றது?

7 comments:

  1. சரிதானுங்க...

    ReplyDelete
  2. நன்றிங்க முத்து!

    ReplyDelete
  3. கரீக்டா சொல்லிகினபா...

    ReplyDelete
  4. பொட்டீக்கட : நன்றி தலீவா!

    சனிக்கெழம வரக்கிம் 6 பரிந்துர இருந்துச்சுத் தல........

    இப்ப திடீர்னு பாத்தா 0 பரிந்துரன்னு காமிக்குது....என்ன மாயமோத் தெர்லபா!

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. முந்தையக் கருத்து திரு. காசி ஆறுமுகம் அவர்களுடையது அல்ல!

    அவருடையப் பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு போலி எழுதியது!

    அக்கருத்து திரு.காசி அவர்களையும், ஒரு சமூகத்தையும் கேவலப்படுத்தும் விதமாக இருந்ததால் நீக்கப்பட்டது!

    அன்புடைய எதிர்க்கருத்தாளர்களே!
    உங்கள் கருத்துக்களை தெரிவிக்க

    1.மனதில் உறுதி இருந்தால் உங்கள் பெயரில் தெரிவிக்கவும்...

    2.இல்லையென்றால் புனைப்பெயரில் தெரிவிக்கவும்...

    3.பயமாய் இருந்தால் அனானியாய் வந்து தெரிவிக்கவும்...

    4.இப்படி இன்னொருவருடைய பெயரில் வந்து குரைத்து விட்டுச் செல்வது எனக்கு வேறொன்றை நினைவுபடுத்துகிறது...

    நட்புடன்,
    அருட்பெருங்கோ.

    ReplyDelete
  7. romba correct....

    ReplyDelete