*
உலக அழகியின் புகைப்படத்தை
உன் வீட்டில்
கண்ணாடி என்பீர்களா?
*
உனதழகை
நீ பார்க்கும்பொழுது
பிரதிபலிக்கிற கண்ணாடி
நீ பார்க்காதபொழுது
உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?
*
உன் வீட்டுக் கண்ணாடிக்கு
தினமும் உனதழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சங்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.
*
நீ வரைந்த கண்ணாடி ஓவியங்களின்
அழகை விசாரிக்கும்பொழுது
உன் 'கண்'ணாடியதை எப்படி ஓவியமாக்க?
*
உன்னை அழகாய்க் காட்டியதற்காக
நீ முத்தமிட்ட கணத்திலிருந்து
தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள தவிக்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி.
கலக்கிடீங்க கவிஞரே
ReplyDeleteரம்யமான கவி
ReplyDeletes
ReplyDeleteஅருட்பெருங்கோ,
ReplyDeleteஉங்களுக்குப் பின்னூட்டம் போட்டால் போர்னோ சைட் என்று வருகிறதே ஏன்?
பார்த்துவிட்டீர்களா? இப்போதும் போர்னோ சைட் ஆர் யூ ஷ்யூர் டு கண்டின்யூ என்று வருகிறது.
ReplyDelete