Monday, May 31, 2010
போகோ புகுந்த வீடு
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த
அக்கா மகள் ஜனனியும்
அண்ணன் மகள் மித்ராவும்
அறிமுகப்படுத்தினார்கள்
ஹனுமானையும், ச்சோட்டா பீமையும்.
ஹனுமானைப் பார்த்துக்கொண்டு
பாட்டி, தாத்தாவை பந்தாடி ஜனனியும்
ச்சோட்டா பீம் வந்ததும்
அத்தை, மாமாவை அடித்து மித்ராவும்
பலம் காட்டுகிறார்கள்.
யாவரும் உறங்கிய பகலொன்றில்
கைகூப்பி, கண்மூடி சுற்றியவள்
“வால் வளர்கிறதா?”வென பார்க்கச்சொல்கிறாள்.
கைகள் முறுக்கி, பற்கள் கடித்து
முட்ட வந்தவள் கேட்டது – “லட்டு இருக்கா”?
வினோத விலங்குகளும்,
அக்கிரமக்காரர்களும் இல்லாதபடியால்
தங்களுக்குள் சண்டையிடத் துவங்குகிறார்கள்,
வாலறுந்த ஜனனியும்,
லட்டு கிடைக்காத மித்ராவும்.
ஹனுமானும், பீமனும்
யுத்தமிடுவதைப் பார்த்து
பேச்சற்றுக் கிடக்கிறோம்
நானும், Mr.பீனும்!
வகை :
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
:) இதே கதை தானா அங்கயும்..
ReplyDeleteடாய்லட்டில் கூட ஜெய் ஹனுமான் ஞானகுனசாகரு பாடரான்ப்பா..
லட்டு சாப்பிட்டா பலமாகலாம்ன்ன்னு லட்டு வாங்கிட்டுவரச்சொல்றான்..
எப்பப்பாரு ப்பீம் பீம் தான்.. பந்தாடுவதுக்கு எங்க வீட்டில் மூன்று பந்துகள்.அக்கா அம்மா அப்பா...
ஆமை புகுந்த வீடு கூட பரவாயில்லை போகோ புகுந்த வீடு சிரமம் தான் போலிருக்கிறது.
ReplyDeleteஅழகான கவிதை
அருமை :)
ReplyDelete@ முத்துலட்சுமியக்கா,
ReplyDeleteஅதே கதைதான் ;) சொன்னால் தீராது, சொல்லத்தான் நேரமில்லை!
@ வேலு ,
உண்மைதான் வேலு! நன்றி!
@ புனிதா,
நன்றிங்க!
நல்லா இருக்கு
ReplyDeleteநன்றி ஹரிணி!
ReplyDeletevery nice
ReplyDelete