காலையிலும்
உனக்கு யார்
வணக்கம் சொல்வதென
சண்டை
ஆரம்பித்து விடுகிறது!
உனக்காக
நான் எழுதி,
சேமித்து வைத்திருக்கும்
என் கவிதைகளுக்கிடையே!
சண்டையிடும்
கவிதைகளுக்குள்
உன்னைப்போல
எளிமையும், அழகுமான
ஒன்றை எடுத்து உனக்கு
அனுப்பி வைக்கிறேன் தினமும்!
இன்று காலையும் இப்படித்தான்
அடம்பிடித்த அத்தனையையும் ஒதுக்கி விட்டு
இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன் உனக்கனுப்ப!
நம்
மகிழ்ச்சியையும்
துயரத்தையும்
பகிர்ந்து கொள்ளலாம்
என்கிறாய்!
வேண்டாமடி!
என் மகிழ்ச்சியையும்
உன் துயரத்தையும்
பரிமாறிக் கொள்வோம்!
ஆனால்,
ஏனோ அனுப்பப்படாமல்
என் மின்மடலிலேயேத்
தேங்கிக்கிடக்கிறது…
உன்னிடம் சொல்லப்படாமல்
மனதுக்குள் தேங்கிக்கிடக்கும்
என் காதலைப் போல…
கவிதைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று!
அல்லது காதலோடு என் கைப் பற்று!
இரண்டில் ஒன்று செய்!
இன்றே அல்ல!
என்றேனும் ஒருநாள்…
ஆனால் அந்த ஒன்று…
இரண்டாவதாகவே இருக்கட்டும்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
inda kavidhaiya anuppirunnda..udane okay solliduvanga.
ReplyDeleteVery nice one.
நன்றி அனிதா...
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்...
அடிக்கடி வாங்க :)
"ஆனால்,
ReplyDeleteஏனோ அனுப்பப்படாமல்
என் மின்மடலிலேயேத்
தேங்கிக்கிடக்கிறது…
உன்னிடம் சொல்லப்படாமல்
மனதுக்குள் தேங்கிக்கிடக்கும்
என் காதலைப் போல…
கவிதைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்று!
அல்லது காதலோடு என் கைப் பற்று!"
அட!... என்ன அருள் நீங்கள்? காதலைச் சொல்லாமல் இன்னமும் மறைத்து வைத்திருக்கிறீங்களா? காதலை எல்லாம் சொல்லாமல் மறைத்து வைத்தால் கடைசியில் சோகம்தான். ஆகவே இன்றே இதையே அனுப்பி வையுங்கள்.
கவிதை மிகவும் நன்று.
பாராட்டுக்கள் அருள்!
hey, Visiting ur blog aft a long time.. All the posts are nice though my side reading-tamil- ezhuththu-kootti is a struggle ;(
ReplyDeleteWish I could have been in a better position to devour ur thoughtful poetries..
/அட!... என்ன அருள் நீங்கள்? காதலைச் சொல்லாமல் இன்னமும் மறைத்து வைத்திருக்கிறீங்களா? காதலை எல்லாம் சொல்லாமல் மறைத்து வைத்தால் கடைசியில் சோகம்தான். ஆகவே இன்றே இதையே அனுப்பி வையுங்கள்./
ReplyDeleteஇதையெல்லாம் அனுப்பி ரொம்ப நாளாச்சுங்க!!! அட நண்பர்களுக்குன்னு சொல்ல வந்தேன் ;-)
//கவிதை மிகவும் நன்று.
பாராட்டுக்கள் அருள்!//
நன்றி சத்தியா...
காசி...
ReplyDeleteஉனக்குப் புரியற மாதிரி எனக்கு இங்கிலீசுல எல்லாம் எழுதத் தெரியாதே... என்ன செய்ய? ;)
yal ahathian,
ReplyDeleteஒரு காலத்தில காதலிச்சா வர்றவங்க நல்லவங்களா இருப்பாங்கன்னு இப்பவே ஒரு நம்பிக்கைதான் ;)))
evalavu azhga kavidhai ezhudara ungalai evvalavu murai vendumanalum urugi urugi kaadhalikkalam. thanks.
ReplyDeleteசுமதி,
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி!!!