Monday, January 29, 2007

"அது"

கொஞ்ச நாட்களாகவே,
எனக்குப் பசிக்கிறது.
சாப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் சாப்பிட முடிவதில்லை…
( திரைப்பட வசனம் போல இருந்தாலும் இது நூற்றுக்கு நூறு உண்மை…
நம் வலைப்பதிவர்களிலேயே பல அனுபவசாலிகள் இருப்பார்கள்…
அவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்)

அசதியாக இருக்கிறது.
தூங்கலாம் போலத் தோன்றுகிறது.
ஆனால் தூக்கம் வருவதில்லை…
புரண்டு புரண்டு படுத்தாலும்
வயிற்றுக்குள் நூறு பட்டாம்பூச்சிகள்

( பட்டாம்பூச்சி மட்டும் இல்லை, குருவி, புறா, மயில் எல்லாமே)
சிறகடித்துப் பறக்கிற மாதிரி
ஓர் உணர்வுதான் வருகிறதே ஒழிய தூங்க முடிவதில்லை!

ஆஹா…
ஒரு வேளை நமக்கும் “அது” வந்து விட்டதோ என்று
மனசாட்சியை எழுப்பிக் கேட்டால்,
அது மர்மமாக ஒரு புன்னகைப் பூக்கிறது!

என்னடா இது கொடுமை,
+2, கல்லூரியில் படிக்கிற வயதில்தானே
“இது” நிறைய பேருக்கு வரும்…
நமக்கு அப்பொழுதெல்லாம் வராமல்,
இப்பொழுது 4 கழுதை வயதாகிறதே…
இப்பொழுது போய் வந்திருக்கிறதே
என்று விசாரித்துப் பார்த்தால்,

மனதில் ஒரு கட்டுப்பாடு இல்லையென்றால்
“இது” எப்பொழுது வேண்டுமானாலும்,

யாருக்கு வேண்டுமானாலும் வருமாம்….

ஆம் நண்பர்களே எனக்கும் “அது” வந்து விட்டது! :-(

அதனால் நீங்களும் காரமான உணவு, எண்ணெயில் பொரித்தவை என்று மனதையும் நாவையும் அலையவிடாமல் ஒரு (உணவுக்) கட்டுப்பாட்டோடு இருந்து “அது” ( அதாங்க “அல்சர்” ) வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு!

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

26 comments:

  1. அடப்பாவமே!

    வேளா வேளைக்குச் சாப்பிடணும்!

    இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்!

    நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலைப் பதிவு எழுதத் தொடங்கி, மூத்த வலைப் பதிவராக ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறியே இது!

    ReplyDelete
  2. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்!

    படக் கவிதை சூப்பர்!

    ReplyDelete
  3. அச்சச்சோ... "அது" வந்துருச்சா...
    உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்கப்பா...

    இந்த "அது" கூட சமாளிச்சிடலாம்... ஆனா., அந்த "அது" வந்துச்சுனா..!??!?

    so.,மனசையும் பத்திரமா பார்த்துக்கோங்கப்பா...

    ReplyDelete
  4. வாங்க சிபி்கல்சிபி,
    / அடப்பாவமே!

    வேளா வேளைக்குச் சாப்பிடணும்!/

    ம்ம்ம்...

    /இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்!

    நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலைப் பதிவு எழுதத் தொடங்கி, மூத்த வலைப் பதிவராக ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறியே இது!/

    சிபி, காமெடி பண்ணாதீங்க :-))))

    ReplyDelete
  5. / இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்!

    படக் கவிதை சூப்பர்!/

    கவிதைப் படமா, படக்கவிதையான்னு சரியா சொல்லுங்க!!! ;-)

    ReplyDelete
  6. //கவிதைப் படமா, படக்கவிதையான்னு சரியா சொல்லுங்க!!! ;-)
    //

    ரெண்டும்தான்!

    யாரு அந்தப் பொண்ணு? ஹரிணியா?

    ReplyDelete
  7. /k4karthik said...

    அச்சச்சோ... "அது" வந்துருச்சா...
    உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்கப்பா.../

    என்னப் பண்றது? உடம்புக்கும் மனசுக்கும் கொஞ்சம் சண்டை நடக்குது போல...

    / இந்த "அது" கூட சமாளிச்சிடலாம்... ஆனா., அந்த "அது" வந்துச்சுனா..!??!?

    so.,மனசையும் பத்திரமா பார்த்துக்கோங்கப்பா... /

    :-))) மனசெல்லாம் பத்திரமா(ன இடத்துல)தான் இருக்கு!!!

    ReplyDelete
  8. //மனசெல்லாம் பத்திரமா(ன இடத்துல)தான் இருக்கு!!!
    //

    கவிதைப் படத்தைப் பார்த்தான் அப்படித் தோன்றவில்லையே!

    எதற்கும் "இப்போதைக்கு" என்ற வார்த்தையை முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  9. /ரெண்டும்தான்!/

    :-)) அப்போ படக்கவிதைனு சொன்னது படமும் கவிதையுமும அப்படிங்கர அர்த்தத்திலா? :)்

    /யாரு அந்தப் பொண்ணு? ஹரிணியா?/

    எனக்கு சொன்னவங்க ஜெனிலியானு சொன்னாங்க...

    ReplyDelete
  10. //அப்போ படக்கவிதைனு சொன்னது படமும் கவிதையுமும அப்படிங்கர அர்த்தத்திலா? :)//

    பின்னே வேறென்னவாம்? படத்தை மட்டும்னு நினைச்சிட்டீங்களா!

    //ஜெனிலியானு//

    அப்படியா! எனக்கு ஹரிணி சாயலாத் தெரிஞ்சிது! மற்றபடி ஹரிணியைப் பிடிக்குமா என்று கெட்டீர்களானால் பிடிக்காது என்றுதான் சொல்ல நினைப்பேன்!

    ReplyDelete
  11. பார்த்து....இன்னொரு 'அதுவும்' இப்படிதான் இருக்கும்.அந்த அது வந்தால் இன்னும் கஷ்டம்!

    ReplyDelete
  12. ஆமாங்க! அந்த அது வராம பார்த்துக்கிடுங்க! அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும்!

    (இன்னும் கொஞ்ச நாட்கள் என்பதை நீங்கள் ஒரு வாரம் என்று எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

    ReplyDelete
  13. /பின்னே வேறென்னவாம்? படத்தை மட்டும்னு நினைச்சிட்டீங்களா!

    :-))) இல்லக் கவிதைய மட்டும்னு நெனச்சிட்டேன் ;-)

    //ஜெனிலியானு//

    அப்படியா! எனக்கு ஹரிணி சாயலாத் தெரிஞ்சிது! மற்றபடி ஹரிணியைப் பிடிக்குமா என்று கெட்டீர்களானால் பிடிக்காது என்றுதான் சொல்ல நினைப்பேன்!/

    என்னங்க இப்படி பொது அறிவுல வீக்கா இருக்கீங்க? ஹரிணி தான் ஜெனிலியா ஜெனிலியாதான் ஹரிணி!!!!

    ReplyDelete
  14. /துர்கா said...

    பார்த்து....இன்னொரு 'அதுவும்' இப்படிதான் இருக்கும்.அந்த அது வந்தால் இன்னும் கஷ்டம்! /

    வாங்க துர்கா,

    முன்னெச்சரிக்கைக்கு நன்றிங்க :-)))

    ReplyDelete
  15. / ஆமாங்க! அந்த அது வராம பார்த்துக்கிடுங்க! அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும்!

    (இன்னும் கொஞ்ச நாட்கள் என்பதை நீங்கள் ஒரு வாரம் என்று எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)/

    ஒருவேளை அந்த அது வந்தாலும் நம்மளப் பாத்தா வந்த வழியிலேயே ஓடிடும் ;-)

    நம்மள என்று நான் சொன்னது என்னை மட்டும்தான்!

    ReplyDelete
  16. இது அதுவா இருந்தா என்ன? அது இதுவா இருந்தா என்ன? எது வந்தாலும் அதுவா நெனச்சு இதப் பதமா சரிப் பண்ணனும். அதுவா, இதுவா ன்னு என்னைக்குமே கொழப்பிக்காம எதுவா இருந்தாலும்...

    சரிப் போதும் :))

    ReplyDelete
  17. /அப்ளை செய்யாமலேயே அருட்பெருங்கோ இங்கு கலாய்க்கப் படுகிறார்./

    இதுக்கு அப்ளை வேற பண்ணனுமா? ;-)))

    ReplyDelete
  18. /ஜி said...

    இது அதுவா இருந்தா என்ன? அது இதுவா இருந்தா என்ன? எது வந்தாலும் அதுவா நெனச்சு இதப் பதமா சரிப் பண்ணனும். அதுவா, இதுவா ன்னு என்னைக்குமே கொழப்பிக்காம எதுவா இருந்தாலும்...

    சரிப் போதும் :)) /

    வாங்க ஜி...

    நீங்களும் ஒரு இதுவாத்தான் பேசறீங்க... ஒருவேளை உங்களுக்கும் அது வந்துடுச்சோ?

    ( நான் சொல்ற அது அந்த அது இல்லை!!!)

    ReplyDelete
  19. வாங்க சார்,

    /கார்த்திக் பிரபு said...

    nalla irukkuyya nalla irukuu /

    என்ன வசனமெல்லாம் பாத்தா சங்கத்துக்கு இப்பவே தயாராகிட்ட மாதிரி இருக்கு!!!

    ReplyDelete
  20. சொன்ன பேச்சு கேக்கனும். காலைல பட்டினி. மதியம் பேருக்குத் திங்குறது. முக்காவாசி மிச்சம் வேற. அப்புறம் வயித்துக்குள்ள ஏரோப்பிளேனே ஓடும். முன்னாடி உக்காந்து திங்குறவனப் பாத்தாவது திருந்தக் கூடாது? என்னவோ போப்பா! ஒடம்பப் பாத்துக்க. நல்லா வயிறு முட்டச் சாப்புடு. சந்தோசமா இரு. அது போதும். வெறும் வயித்துல டீ காப்பி சாப்பிடாம சாப்பிட்டப்புறம் சாப்பிடு.

    ReplyDelete
  21. ராசா..உடம்பை பார்த்துக்கப்பா...

    நல்லா சாப்பிடு...சரியா..

    ReplyDelete
  22. வாங்க ராகவன்,

    /சொன்ன பேச்சு கேக்கனும். காலைல பட்டினி. மதியம் பேருக்குத் திங்குறது. முக்காவாசி மிச்சம் வேற. அப்புறம் வயித்துக்குள்ள ஏரோப்பிளேனே ஓடும்./

    என்னப் பண்றது நான் சொல்ற பேச்ச என்னோட வயிறும் கேட்க மாட்டேங்குது மனசும் கேட்க மாட்டேங்குது... ஒரே சண்டை தான் போங்க... :)

    / முன்னாடி உக்காந்து திங்குறவனப் பாத்தாவது திருந்தக் கூடாது? /

    அவர் வேகத்துக்கு எல்லாம் என்னால ஈடு கொடுக்க முடியாதுப்பா ;-)

    /என்னவோ போப்பா! ஒடம்பப் பாத்துக்க. நல்லா வயிறு முட்டச் சாப்புடு. சந்தோசமா இரு. அது போதும்./

    சந்தோசமா இருக்க விட்டாதானே அந்த PM... ம்ஹும்...

    / வெறும் வயித்துல டீ காப்பி சாப்பிடாம சாப்பிட்டப்புறம் சாப்பிடு.
    /

    அத தான் கத்துக்கொடுத்துட்டீங்களே... அப்புறமென்ன :-)))

    ReplyDelete
  23. வாங்க கோபி,

    / ராசா..உடம்பை பார்த்துக்கப்பா...

    நல்லா சாப்பிடு...சரியா.. /

    அக்கறைக்கு நன்றிங்க கோபி!!!

    நல்லாதான் சாப்பிடுறேன்... பார்ப்போம்!!!

    ReplyDelete
  24. //
    நாமக்கல் சிபி said

    நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலைப் பதிவு எழுதத் தொடங்கி, மூத்த வலைப் பதிவராக ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறியே இது!
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete