எனக்குப் படிப்பைக் கெடுப்பதாய்த் தோன்றும்...
தங்கைக்கு இசையை இடையூறு செய்வதாய்த் தோன்றும்...
அப்பாவுக்கு பூஜையையும், அம்மாவுக்குத் தூக்கத்தையும் தொல்லைப்படுத்துவதாய்த் தோன்றும்...
தாத்தாவுக்கு மட்டும் மருந்து கொண்டுபோகத் தோன்றும்...
படுக்கையில் பாட்டியின் இருமல்!
சந்திப்போம்!
சொல்ல வந்த கருத்து நல்லா இருக்கு. தேவையில்லாத வார்த்தைகளை நீக்கிட்டு எழுதினா மனசில உடனே பதியும்.
ReplyDeleteநன்றி கீதா!
ReplyDeleteஎன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள
உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகள் உதவும்!
உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருக்குங்க.
ReplyDeleteகவிதையும் ஒருவகையில் தாத்தாவின் இருமல் போல்தான். நாலுபேருக்குப் பிடிப்பதில்லை. அதற்காக இருமாமல் இருக்க முடியுமா?
வார்த்தைகளை அழகாக வைத்து பலபேர் உண்மையைக் கொன்றுகொண்டு இருக்கிறார்கள்; சும்மா ஏதோ சொல்லுகிறார்கள். நீங்கள் சொல்லும் கருத்து ஆணித்தரமாக இருப்பதால், நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். ஏனெனில், பொருள் குற்றத்தினால்தான் நெற்றிக்கண்ணே திறந்தது. சொற்குற்றம் மன்னிக்கப்படலாம்.
-ஞானசேகர்
--
Posted by J S ஞானசேகர் to அமராவதி ஆத்தங்கரை at 2/04/2006 05:48:11 PM
(மின்மடலில் தேங்கிக் கிடந்த பின்னூட்டம்! எப்படி பதிப்பது எனத் தெரியாததால், வெட்டி ஒட்டி விட்டேன். நன்றி - ஞானசேகர்)