Friday, January 21, 2011

ஜனனி மித்ரா பொங்கல் நடனம்

16 சனவரி 2010 :

பொங்கல் திருவிழா அன்று கரூரில் வீட்டருகில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பயங்கரமாக பயிற்சியெல்லாம் செய்துகொண்டு வந்திருந்தாள் மித்ரா. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்போதே மித்ராவுக்கு கண்ணைக்கட்ட, ஒரு மணி நேரம் கழித்து அவள் மேடையேறிய போது மொத்தமாக தூக்கத்தில் இருந்தவள், பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவளைப் போல ஆடாமல் நின்று வெறுப்பேற்ற... மைக்கில் அறிவிக்கும் ஆள் வேறு 'பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்து இன்னும் கடுப்பேற்ற... அடுத்த பொங்கலில் மித்ராவை எப்படியாவது ஆடவைக்க அண்ணி போட்ட சபதத்தின் விளைவு :

16 சனவரி 2011 :
[flashvideo filename=video/Mithra-Video/Janani_Mithra_Dance_conv.flv /]
இந்த ஆண்டு moral support க்கு ஜனனியும் சேர்ந்துகொள்ள எப்படியோ பரிசும் வாங்கி விட்டார்கள். அந்த துணிச்சலில் அடுத்த ஆண்டு இருவரும் தனித்தனியாக களமிறங்கப் போகிறார்களாம் :)

2 comments:

  1. Nice. moral support -kku mama-vum serthu aadiyirukalam.

    ReplyDelete
  2. ராம் பிரசாத்,

    nieces are always nice :) எனக்கும் ஒரு பத்து வயசு கொறஞ்சு ஆறு வயசா இருந்திருந்தா ஆடியிருக்கலாம் ;)

    ReplyDelete