Tuesday, June 03, 2008

ஏமாந்தியா?

காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.

26 comments:

  1. MaragathavalliJune 03, 2008 3:07 PM

    kaalaiyilae nalla vaangi katti irukkenga pola...

    ReplyDelete
  2. குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?
    :)

    ReplyDelete
  3. //குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//


    Repeatttuuuuuu...

    ReplyDelete
  4. //கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.//


    Ungal Kaiyaadal Nalla Irukku...

    ReplyDelete
  5. \\நாடோடி இலக்கியன் Says:

    June 3rd, 2008 at 10:08 am
    குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    :))

    ReplyDelete
  6. மாப்பி உன்னை பத்தி இந்த இலக்கியனுக்கு தெரிஞ்சி போச்சுப்பா ஓடிப்போய் ஒளிஞ்சிக்க :)

    ReplyDelete
  7. மரகதவல்லி, இதெல்லாம் எங்களுக்கு பொழுதுபோக்கு ;)

    ReplyDelete
  8. / குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?/

    சரியா சொன்னீங்க இலக்கியன். பொண்ணுக்கு வயசு 18, 20 தான் இருக்கும். வயசு வருசத்துல இல்ல மாசத்துல ;)

    ReplyDelete
  9. /குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//
    :)) /
    அக்கா, யூ டூ???

    ReplyDelete
  10. /மாப்பி உன்னை பத்தி இந்த இலக்கியனுக்கு தெரிஞ்சி போச்சுப்பா ஓடிப்போய் ஒளிஞ்சிக்க/

    நான் ஒளிஞ்சிக்கறேன். நீ என்னைய கண்டுபிடிக்கனும் சரியா? நாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளையாடலாம்….கிர்ர்ர்ர்ர் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?

    ReplyDelete
  11. செந்தில் குமார், நீங்க எப்போ நடுவுல வந்தீங்க? வாழ்த்துக்கு நன்றி. ரிப்பீட்டுக்கு கிர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. Anna antha kozhanthaikku 21 vayasunnu neenga yaarukkume sollaliya..?!? ;-)

    ReplyDelete
  13. வாம்மா மின்னல். எங்க இன்னும் வரலையேன்னு பார்த்தேன் :)
    அண்ணன கலாய்க்கிறதுல இந்த தங்கச்சிங்களுக்கு அப்படி என்னதான் சந்தோசமோ!

    ReplyDelete
  14. Anna naan Minnal illa...!! :-(
    Sri.......!!
    Paartheengala ippove peramaranthutteenga......!! :-(

    ReplyDelete
  15. பதிவு போட்டதும் மின்னல் மாதிரி வந்துடுவீங்களேன்னு சொன்னேன். அழாதீங்க!!!

    ReplyDelete
  16. oh ok...!!
    Naankooda antha kozhanthaiya paarthathula ungalukku ellam maranthu pOchunu kavalai pattutten.....!! ;-)

    ReplyDelete
  17. குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க... !!!

    என்ஜாய் சகோதரா!!!

    ReplyDelete
  18. //குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க… !!!//

    அப்படியா அருள்..!
    :)

    ReplyDelete
  19. @Sri,

    இனிமே நான் எந்த குழந்தையையுமே பார்க்கல. ஓக்கேவா? :)

    ReplyDelete
  20. /குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க !!!

    என்ஜாய் சகோதரா!!!/

    முதல் வரிய படிச்சதும் ஏதோ பரிதாபப்படுறீங்களேனு நெனச்சேன்.

    அடுத்த வரியில கும்மிட்டீங்களே ஆல்பர்ட். நல்லாருங்க :)

    ReplyDelete
  21. /அப்படியா அருள்..!/

    இலக்கியரே. வாங்கறதுன்னா கும்மறது. இப்போ நீங்க கும்முற மாதிரி ;)

    ReplyDelete
  22. சில சம்பவங்கள் திரும்ப திரும்ப மெல்லிய இசையோடு ஸ்லோ மோஷனில் பிளே ஆகி நினைவலைகளை வருடி செல்லும். யோசித்து பார்த்தால் அதில் குறிப்பிடதகுந்ததாய் ஒன்றும் இருக்காது. ஆனால் எதோ உணர்வினை அது மீட்டுகிறது என்பது உண்மை.

    ReplyDelete
  23. உண்மைதான் சாய்ராம்.
    அந்த குழந்தையிடம் நான் எதிர்பார்த்தது ஒன்று. என்னை ஏமாற்றுவதாக நினைத்து அது செய்ததோ வேறொன்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட அது செய்தது அழாகாய் இருந்தது.

    ReplyDelete
  24. //குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…

    ReplyDelete
  25. ///குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…/

    எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சி கும்மறதுன்னா வந்துட்ற மாப்ள! நல்லாரு! :)

    ReplyDelete
  26. இந்த கவிதைய ஒரு நாள் அந்த பாப்பா படிச்சிட்டு அருள்-எ கும்ம போகுது..

    ReplyDelete