Sunday, July 22, 2007

உலகிலேயே மிகப்பெரிய சிறுகதை :)

...உலகத்துல எத்தனையோ கண்டம் இருக்கு. அதுல ரொம்பப் பெருசு நம்ம ஆசியாக்கண்டம்தான் அப்படிங்கறதும் சில அறிவுஜீவிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அந்தப் பெரிய கண்டத்துல பல நாடுக இருந்தாலும் இந்தியாவ மட்டும்தான் துணைக்கண்டம்னு சொல்லுவாங்களாம். அதுல பல மொழிகள் பேசப்பட்டாலும் ரொம்பப் பழமையான மொழிகள்ல இந்தத் தமிழும் ஒன்னு. பழசா இருக்கிற அளவுக்கு அது புதுசாவும் இருக்குனு சொல்லுவாங்க.(பதிவு சரியான மொக்கையா இருக்கேன்னு இதோட நீங்கப் போயிட்டா அதுவும் இந்தப் பதிவோட வெற்றி தான்;)) புதுசாவும் இருக்கிறதுக்கு கணினி உலகத்துலயும் அது கோலோச்சிக்கிட்டு இருக்கிறதுதான் காரணம். அதுலயும் இந்த வலைப்பதிவுகள்லயும் அது புகுந்து விளளயாடிட்டு இருக்கு. வெளியூர் வந்து பொட்டி தட்டுற நெறைய தமிழ் ஆளுங்க பொழுதுபோக்கா இல்ல பொழப்பாவே வலைப்பதிவுகள் எழுதுறாங்களாம். அப்படியிருக்கிற தமிழ்வலைப்பதிவுகள்ல பல அறிவிக்கப்படாத சங்கம் / அறிவிக்கப்பட்ட சங்கம் எல்லாம் இருந்தாலும் இந்த வ.வா.சங்கம்னு ஒன்னு எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு இருக்கு. அதுல வேலையில்லாத வெவசாயி ஒருத்தர் மொக்கைப் பதிவு எழுதறதுக்குஒரு போட்டி வச்சிருக்கார். அதுல மொக்கைப் போட்றதயே முழுநேரத் தொழிலா நடத்திட்டு இருக்கிற செந்தழல் ரவி, நாமக்கல் சிபி மாதிரியான ஆட்கள் எல்லாம் களத்துல இருக்கும்போது அப்பப்போ கவிதைங்கற பேர்ல மொக்கைப் போட்டுட்டு இருக்கிற அருட்பெருங்கோங்கற ஆசாமிக்கும் ஒரு மொக்கைக் கதை எழுதனும்னு ஆசை வந்து எழுதியும் போட்டுட்டார். அவர் எழுதினக் கதை இதுதான் : "பரந்து விரிந்த இந்த ...."

(கதையின் தொடர்ச்சிக்கு மறுபடியும் இந்தப் பதிவின் முதல் வரிக்கு செல்லவும் )




இது வ.வா.சங்கம் அறிவித்திருக்கும் மொக்கைப் பதிவுகள் போட்டிக்கு எழுதப்பட்டது. உண்மையிலேயே சிறுகதை எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்கவும் ;)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

12 comments:

  1. நெஜமாகவே மிகப்பெரிய சிறுகதைதாங்க!

    படிச்சு முடிச்சுட்டு அடுத்த நூற்றாண்டுல வந்து கருத்து சொல்லறேன் :)

    ReplyDelete
  2. வாங்க இளவஞ்சி,

    / நெஜமாகவே மிகப்பெரிய சிறுகதைதாங்க!

    படிச்சு முடிச்சுட்டு அடுத்த நூற்றாண்டுல வந்து கருத்து சொல்லறேன் :)/

    நன்றிங்க... மறக்காம கருத்த சொல்லிடுங்க ;)

    ReplyDelete
  3. ஏனிப்படி? ஏனிப்படி? ஏனிப்படி?

    ReplyDelete
  4. ஒரு மனுசன் நல்லா கவிதை போட்டுகிட்டுருந்தாரு அவரையும் இந்த வ.வா.ச கார விவசாயி கெடுத்துப்புட்டாரே

    ReplyDelete
  5. / என்ன அருட்பெருங்கோ!
    ம்ம்ம்.
    ஒரு நல்ல காதல் கதை எதிர்பார்த்து வந்தேன்..you too!/

    நாந்தான் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டேனே மேடம்... உங்களுக்காக அடுத்தப் பதிவும் போட்டாச்சு :)

    ReplyDelete
  6. / ஏனிப்படி? ஏனிப்படி? ஏனிப்படி?/

    என்ன ராகவன் செய்யறது, எவ்வளவுநாள் தான் கவிதைங்கற பேர்லையே மொக்கப் போட்றது? அதான் மொக்கைனு சொல்லியே ஒன்னு :)

    ReplyDelete
  7. வாங்க தமிழ்,

    / ஒரு மனுசன் நல்லா கவிதை போட்டுகிட்டுருந்தாரு அவரையும் இந்த வ.வா.ச கார விவசாயி கெடுத்துப்புட்டாரே/

    எல்லாப்புகழும் அண்ணன் இளாவுக்கே!!!

    ReplyDelete
  8. yennak kodumai sir ithu?

    ReplyDelete
  9. / yennak kodumai sir ithu?/

    வெவசாயிய தான் கேட்கனும் என்பீ :)

    ReplyDelete
  10. அருமையான வலைப்பூ.அசத்துங்கள்.

    ReplyDelete
  11. வட்டச் சுழல் பாணியில் அமைந்த இந்தக் கதை அல்லது மொக்கை அருமை.

    ReplyDelete
  12. விமல்,
    நன்றிங்க விமல்!!!

    சுந்தர்,
    இந்த மொக்கையெல்லாம் நான் சின்னப் பையனா இருந்தப்ப என்னோட அண்ணன் எங்கிட்ட சொன்னது. அதனால எல்லாப் புகழும்(?) அவருக்கே :-)

    ReplyDelete