Thursday, May 17, 2007

பிறகெப்படிக் காதலிப்பது?

குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்...

"அழகி" என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்...

நீ சும்மா சொல்லும்
"பேச மாட்டேன் போ" க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்...

"ம்ம்ம். நல்லா இருக்கு!"
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்...

உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...

நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...

...எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!

இருந்து விட்டுப் போகட்டும்...

பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

21 comments:

  1. //பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல//

    அடடே... :-)

    //ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...

    உன் மௌன விரதநாட்களிலும் கூட
    தொலைபேசியில் உன்னையழைத்து
    நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...

    நம் முதுமையில் வாசித்து மகிழ
    இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
    நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//

    அடடா, காதலிக்கும் மக்களின் காரியங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஆதரவுக் கவிதை

    ReplyDelete
  2. \\...எல்லாமே இவர்களுக்குப்
    பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!

    இருந்து விட்டுப் போகட்டும்...

    பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\

    அட்றா....அட்றா....அருள் கலக்குறிங்க ;)

    ReplyDelete
  3. //ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...

    உன் மௌன விரதநாட்களிலும் கூட
    தொலைபேசியில் உன்னையழைத்து
    நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...//

    நான் ரசித்த வரிகள் :)))

    எப்படி அருட்?? நின்னுக்கிட்டே யோசிப்பீங்களோ??

    ReplyDelete
  4. காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?
    பைத்தியம் வந்ததால் காதல் வந்ததா?
    ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டே வந்துருது இல்ல....வாழ்நாள் முழுதும் பைத்தியமாகவே இருக்க வாழ்த்துகிறேன். :)

    பர்சுக்குள் பதுக்கி வைத்த வானவில் நல்லாயிருக்கு. மௌனவிரத தொலைபேசி நல்லாயிருக்கு. மொத்தத்துல பொலம்பல் நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  5. ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...


    என்னபன்றது மனோ

    உங்க முப்பது வார்த்தை கவிதையை வாழ்த்த 30 லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் பொறுக்குவதும்... ஒன்னும் பொருந்தமாட்டேங்குது

    இப்படியே தொடருங்கள்...

    வழ்த்துக்கள்....

    மீறான் அன்வர்

    ReplyDelete
  6. சுத்த பைத்தியமா இருக்கீங்களே.
    (அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. சூப்பர்

    "பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல"

    நல்ல கற்பனை

    "மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்..."

    நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது இப்படித்தானோ?

    "பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?"

    காதல் வந்தால் பைத்தியம் பிடிககுமா?
    இல்லை
    பைத்தியம் பிடித்தால் காதல் வருமா?

    ReplyDelete
  8. நம் முதுமையில் வாசித்து மகிழ
    இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
    நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்..


    this is simply beautiful...chance ille...too good.....

    ReplyDelete
  9. எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்.

    ////ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...///

    இதை எல்லாம் அனுபவிச்சாதான் புரியும் இல்லை.

    //நம் முதுமையில் வாசித்து மகிழ
    இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
    நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//

    எப்படி காதலிக்கலாம்னு ஒரு புக் போட சொன்னேன் இல்லை. இன்னுமா போடலை.

    //இருந்து விட்டுப் போகட்டும்...

    பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\

    ஏன் அம்மணி உங்களை "லூசாப்பா நீ" ன்னு கேட்டுட்டாங்களா..

    ReplyDelete
  10. \\சிறில் அலெக்ஸ் said...
    சுத்த பைத்தியமா இருக்கீங்களே.
    (அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)

    நல்லாயிருக்கு//

    :)
    very true.

    ReplyDelete
  11. வாங்க பிரேம்,

    / //பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல//

    அடடே... :-)/

    உங்க பர்சுக்குள்ள வானவில் இல்லையா? அப்புறமென்ன அடடே? ;-)

    //ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...

    உன் மௌன விரதநாட்களிலும் கூட
    தொலைபேசியில் உன்னையழைத்து
    நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...

    நம் முதுமையில் வாசித்து மகிழ
    இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
    நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//

    அடடா, காதலிக்கும் மக்களின் காரியங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஆதரவுக் கவிதை/

    நன்றி நண்பா...

    ReplyDelete
  12. வாங்க கோபி,

    /அட்றா....அட்றா....அருள் கலக்குறிங்க ;)/

    பைத்தியமானா கலக்குறதா? அட எனக்கு இது தெரியாம போச்சே :-)

    ReplyDelete
  13. ஐயா விட்டுடுங்க!! தாங்கல

    ReplyDelete
  14. வாங்க ஜி,

    /நான் ரசித்த வரிகள் :)))

    எப்படி அருட்?? நின்னுக்கிட்டே யோசிப்பீங்களோ??/

    ரசிக்கிற மாதிரி இருந்த சந்தோசம் தான்...

    தல, பொலம்பறதெல்லாம் யோசிச்சா பொலம்ப முடியும்?

    ReplyDelete
  15. வாங்க ஜிரா, (ஜி க்கு அப்புறம் ஜிரா :))

    / காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?
    பைத்தியம் வந்ததால் காதல் வந்ததா?
    ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டே வந்துருது இல்ல....வாழ்நாள் முழுதும் பைத்தியமாகவே இருக்க வாழ்த்துகிறேன். :)/

    :-))))) (இது வாழ்த்துதான்னு நெனச்சுக்கிட்டு சிரிக்கிறேன், எதாவது உள்குத்து இருந்தா சொல்லிடுங்க)

    /பர்சுக்குள் பதுக்கி வைத்த வானவில் நல்லாயிருக்கு. மௌனவிரத தொலைபேசி நல்லாயிருக்கு. மொத்தத்துல பொலம்பல் நல்லாவே இருக்கு./

    நீங்க தான் சரியா சொல்லிருக்கீங்க பொலம்பல்னு...நன்றி ராகவன்!!! ;)

    ReplyDelete
  16. வாங்க அன்வர்,

    / ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...


    என்னபன்றது மனோ

    உங்க முப்பது வார்த்தை கவிதையை வாழ்த்த 30 லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் பொறுக்குவதும்... ஒன்னும் பொருந்தமாட்டேங்குது/

    இதெல்லாம் ரொம்ப டூ மச் பா...

    /இப்படியே தொடருங்கள்...

    வழ்த்துக்கள்....

    மீறான் அன்வர்/

    ம்ம்ம் வாழ்த்துக்கு நன்றி வச்சிக்கறேன் :)்

    ReplyDelete
  17. வாங்க சிறில்,

    / சுத்த பைத்தியமா இருக்கீங்களே.
    (அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)/

    ஹி ஹி (பைத்தியம் மாதிரியே சிரிக்கிறேனோ? ;))

    /நல்லாயிருக்கு./

    நன்றிகள்!!!

    ReplyDelete
  18. வாங்க சூர்யா,

    / சூப்பர்

    "பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல"

    நல்ல கற்பனை/

    நன்றி...

    /"மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்..."

    நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது இப்படித்தானோ?/

    நான் இன்னும் கவிதை எழுத ஆரம்பிக்கலீங்கோ... எழுதிப் பழகறேன்... அதான் உங்களுக்கெல்லாம் வந்த சோதனை :)

    /"பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?"

    காதல் வந்தால் பைத்தியம் பிடிககுமா?
    இல்லை
    பைத்தியம் பிடித்தால் காதல் வருமா?/

    காதல் வந்தாலும் பைத்தியம் பிடிக்கும...் போனாலும் பைத்தியம் பிடிக்கும்... அப்படிதான் சொல்லிக்கிறாங்க...

    ReplyDelete
  19. /this is simply beautiful...chance ille...too good...../

    சரிங்க அனானி ... உங்க அனுபவத்த சொல்லிட்டனோ? ;)

    ReplyDelete
  20. வாங்க நந்தா,

    / எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்./

    இரண்டு மாதம் மும்பை வாசம்...

    ////ம்ம்ம். நல்லா இருக்கு!"
    நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
    மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
    நான் கவிதைகள் பொறுக்குவதும்...///

    இதை எல்லாம் அனுபவிச்சாதான் புரியும் இல்லை.//

    :-? தெரியலையே!!

    //நம் முதுமையில் வாசித்து மகிழ
    இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
    நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//

    எப்படி காதலிக்கலாம்னு ஒரு புக் போட சொன்னேன் இல்லை. இன்னுமா போடலை./

    எனக்கு அடி வாங்கிக்கொடுக்கனும்னு முடிவே பண்ணிட்டீங்களா? :)

    //இருந்து விட்டுப் போகட்டும்...

    பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\

    ஏன் அம்மணி உங்களை "லூசாப்பா நீ" ன்னு கேட்டுட்டாங்களா../

    படக்கவிதை காண்க :)

    ReplyDelete
  21. வாங்க முத்துலட்சுமி,

    \\சிறில் அலெக்ஸ் said...
    சுத்த பைத்தியமா இருக்கீங்களே.
    (அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)

    நல்லாயிருக்கு//

    :)
    very true.//

    :)))) நன்றி!!!

    ReplyDelete