Wednesday, March 07, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 200

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி


20. புணர்ச்சி விதும்பல்


“உன்னை எனக்குப் பெயர் வைக்க சொன்னால்
என்ன பெயர் வைப்பாய்?” என்று கேட்பவளிடம்,
‘மதுமதி’ என்றேன்.
போதை தரும் நிலவுக்கு
வேறென்ன பெயர் வைக்க முடியும்?

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.


உன் காதலின் முன்னே போட்டியிட முடியாமல்
உன்னிடம் சரணடைகின்றன
என் சின்னக் கோபங்கள்!

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


“உன்னோடுப் பேச மாட்டேன்” என்று சொல்லி விட்டு
கண்களால் இத்தனைக் காவியம் வடிப்பதற்கு பதில்
நீ வாயைத் திறந்தே பேசி விடலாம்!

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.


நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.


என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
நம் காதல்!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து.

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.


நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!


காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.


உன்னோடு
நான் போடும் சண்டையெல்லாம்
உன்னிடம் தோற்பதற்கே!


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?


பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
என் மார்பில் முகம் புதைத்து
நீ வடித்தக் கண்ணீரில்
மேலும் சுத்தமாகிறது என் காதல்!

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.


இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
என் காதல் மிக மிக மென்மையானது
உன்னைப் போல!


மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.


பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!


கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

17 comments:

  1. Unmaya epdi evlo thathroobama ezhuthringa..... great.... Azhgana kuraluku azhagana Vilakam.... :)

    ReplyDelete
  2. Ithai vida supera kuraluku kavithai..... Yosika thonala... Romba nalla iruku...

    ReplyDelete
  3. வாங்க சுபா,

    /Unmaya epdi evlo thathroobama ezhuthringa..... great.... Azhgana kuraluku azhagana Vilakam.... :)/

    உண்மையா? அப்படின்னு யார் சொன்னது? பிரேம் சொல்றத எல்லாம் நம்பாதீங்க :-)))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க…

    ReplyDelete
  4. /Ithai vida supera kuraluku kavithai..... Yosika thonala... Romba nalla iruku.../

    என்னங்க நானே குறளக் காப்பியடிச்சுட்டு இருக்கேன்…சரி சரி கவிஞர்கள் காதுல விழுந்தா சிரிக்கப் போறாங்க…சத்தம் போடாதீங்க…. :-)))

    ReplyDelete
  5. அன்பு அருள்....காதல் பூக்கும் மாதம் இன்னும் வருமா!!!

    தொடருங்கள்...

    \\இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
    என் காதல் மிக மிக மென்மையானது
    உன்னைப் போல!\\
    அட..அட..பின்னிட்டீங்க..

    ReplyDelete
  6. உங்கள் கவிதையை இப்போது ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒலி FM-இல் கேட்டேன்! மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில்... வாழ்த்துக்கள்! :-)

    அன்புடன் குழுமத்திலிருந்து 3 பேர் பங்கேற்கின்றனர்:

    (பதிவர்) நா.கண்ணன்
    (பதிவர்) ரசிகவ் ஞானியார்
    கவிஞர் புகாரி

    http://www.olifm.com/liveradio.php

    மறு ஒலிபரப்பு நேரம் குறித்த தகவல் வேண்டுமானால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  7. //அன்பு அருள்....காதல் பூக்கும் மாதம் இன்னும் வருமா!!!

    தொடருங்கள்...//
    இன்னும் ஒரு 4 அதிகாரங்கள் மிச்சம் இருக்கின்றன…அவற்றையும் முடிக்க வேண்டுமில்லையா?

    \\இப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்காதே
    என் காதல் மிக மிக மென்மையானது
    உன்னைப் போல!\\
    அட..அட..பின்னிட்டீங்க..//

    நன்றிங்க :-)))

    ReplyDelete
  8. //உங்கள் கவிதையை இப்போது ஒரு நிமிடத்துக்கு முன்பு ஒலி FM-இல் கேட்டேன்! மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில்... வாழ்த்துக்கள்! :-)//
    நன்றிங்க சேதுக்கரசி!!! இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு என்றதால் என்னால் கேட்க இயலவில்லை :( … ஆனால் கவிதையைக் கேட்டு விட்டு நீங்கள் வாழ்த்துவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது :)))

    //அன்புடன் குழுமத்திலிருந்து 3 பேர் பங்கேற்கின்றனர்:

    (பதிவர்) நா.கண்ணன்
    (பதிவர்) ரசிகவ் ஞானியார்
    கவிஞர் புகாரி //

    அன்புடன் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்…

    /http://www.olifm.com/liveradio.php

    மறு ஒலிபரப்பு நேரம் குறித்த தகவல் வேண்டுமானால் தெரிவிக்கவும்./

    சொல்லுங்க… மாலையிலாவது கேட்க முடியும் என்று நினைக்கிறேன்…

    ReplyDelete
  9. கையக் கொடுங்க, brilliant words!
    my choice:

    //பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
    எந்தக் காரணமும் சொல்லாமல்
    என் மார்பில் முகம் புதைத்து
    நீ வடித்தக் கண்ணீரில்
    மேலும் சுத்தமாகிறது என் காதல்!//
    &
    //என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
    உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
    வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
    அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
    நம் காதல்!//

    ReplyDelete
  10. //Deekshanya has left a new comment on your post "இது காதல் பூக்கும் மாதம் - 200":

    கையக் கொடுங்க, brilliant words!
    my choice:

    //பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
    எந்தக் காரணமும் சொல்லாமல்
    என் மார்பில் முகம் புதைத்து
    நீ வடித்தக் கண்ணீரில்
    மேலும் சுத்தமாகிறது என் காதல்!//
    &
    //என்னைப் பிரிந்து விட்டதற்காக நீயும்
    உன்னைப் பிரிய விட்டதற்காக நானும்
    வருத்தப் பட்டுக் கொண்டிருக்கையில்…
    அமைதியாக நம்மை சேர்த்து வைக்கிறது
    நம் காதல்!//

    நன்றிங்க தீக்ஷண்யா…
    கருத்தை வள்ளுவனிடமும், சொல்லைத் தமிழிடமும் கடன் வாங்கிக் கொள்கிறேன்! :-)

    ReplyDelete
  11. //சொல்லுங்க… மாலையிலாவது கேட்க முடியும் என்று நினைக்கிறேன்//

    2 நாளைக்கப்புறம் இன்னிக்கு தான் வரேன் :( ஆனா ஒலி FM பொதுவா ஒரு 6 முறை ஒலிபரப்புவாங்க 24 மணிநேரத்தில். அந்த நேரங்களின் பட்டியலை எனக்குக் கொடுத்திருந்தாங்க.

    ReplyDelete
  12. //2 நாளைக்கப்புறம் இன்னிக்கு தான் வரேன் :( ஆனா ஒலி FM பொதுவா ஒரு 6 முறை ஒலிபரப்புவாங்க 24 மணிநேரத்தில். அந்த நேரங்களின் பட்டியலை எனக்குக் கொடுத்திருந்தாங்க.//

    பரவாயில்லங்க அதனாலென்ன… ஒலிபரப்பானது அப்படிங்கற செய்தியே போதும்ல :-)))

    ReplyDelete
  13. Latest news!
    மறு ஒலிபரப்பு ஆகப்போகிறதாம் :-)

    அமெரிக்க / கனடிய கிழக்கு நேரம் (EST)

    சனிக்கிழமை மார்ச் 10:
    - இரவு 9:00
    - நள்ளிரவு 12:00
    ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
    - அதிகாலை 3:00
    - காலை 6:00
    - காலை 9:30
    - மதியம் 1:00
    - மாலை 4:30

    *

    இந்திய நேரம் (IST)

    ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
    - காலை 7:30
    - காலை 10:30
    - மதியம் 1:30
    - மாலை 4:30
    - மாலை 8:00
    - இரவு 11:30
    - நள்ளிரவு 3:00

    http://www.olifm.com/liveradio.php

    கேட்டு மகிழுங்கள்:

    * ஆர்.எஸ். மணியின் பேச்சு
    * ஆர்.எஸ். மணியின் குரல் மற்றும் இசையில் கவிஞர் புகாரியின் கவிதை
    (இவையிரண்டும் மேற்கண்ட ஒலிபரப்பு நேரத்துக்கு 1/4 மணி அல்லது 1/2 மணிநேரம் முன்பே வந்துவிடும்!)
    * நா.கண்ணனின் கவிதை
    * நிலவு நண்பன் ரசிகவ் ஞானியாரின் கவிதை
    * அருட்பெருங்கோவின் கவிதை
    * சிறில் அலெக்ஸுடன் உரையாடல்

    ReplyDelete
  14. Kuraluku azhaga vilakkathoda Ezhuthurigna... Atha than apdi sonnen...Antha anony naane..! yaarum sirika mattanga.. Santhosha paduvanga...

    ReplyDelete
  15. kavithaikalum ... mokkaihalum mattum endre ninaithen... kuralukum kuda kavithaikal... arumai miha aurmai... menmelum ungal ezhuthu pani thodara manamaardha vazzhthukal arul...

    hats off!!!

    ReplyDelete
  16. /Kuraluku azhaga vilakkathoda Ezhuthurigna... Atha than apdi sonnen...Antha anony naane..! yaarum sirika mattanga.. Santhosha paduvanga.../

    இல்லீங்க Mrs. பிரேம்…
    விளக்கமெல்லாம் கலைஞரோடது…
    கிறுக்கல் மட்டும் தான் என்னோடது :)

    ( நீங்க மார்ச்சுல போட்ட கமெண்டுக்கு நவம்பர்ல வந்து பதில் சொல்லிருக்கேன்.. :( )

    ReplyDelete
  17. /kavithaikalum ... mokkaihalum mattum endre ninaithen... kuralukum kuda kavithaikal... arumai miha aurmai... menmelum ungal ezhuthu pani thodara manamaardha vazzhthukal arul...

    hats off!!!/

    கவிதைகள்னு நெனச்சு நான் எழுதறதே மொக்கைனுதான் நண்பர்கள் கலாய்க்கறாங்க :)
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மரகதவள்ளி!!!

    ReplyDelete