Monday, November 13, 2006

காதல் ரயில்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதலில் கட்டிப் போடும் என்னைக்
கண்களாலேயேக் கட்டிப் போடுகிறாய்…
இதுதான் “கண்கட்டி வித்தை” என்பதா??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல் பார்வையில் நீ அழகு…
மறு பார்வையில் பேரழகு...
யாரிடம் பெற்றாயோ,
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னைக் கவிதை என்றேன்!
ஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாருமற்றத் தனிமையில்
என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
குடும்பத்தோடு இருக்கையில்
என்னைத் தனிமைப் படுத்துகிறது…
உன் நினைவு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு தண்டவாளமாய் நீ!
மறு தண்டவாளமாய் நான்!
நமக்கேத் தெரியாமல்
நம்மீது பயணிக்கிறது
காதல் ரயில்!!

( பின்குறிப்பு :
இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அமராவதி ஆத்தங்கரை! )

13 comments:

  1. mmmm கலக்குங்க...

    ReplyDelete
  2. இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கைகோர்த்து விளையாடும்
    கண்கட்டிவித்தை செய்யும்
    அழகு பேரழகாகும்
    செல்லமாக கோபித்துக்கொள்ளும்
    கொண்டபின் குடும்பம் நடத்தும்
    நினைவோடு தனிமைபடுத்தும்
    பயணிக்கட்டும் காதலாய்
    ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!

    அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :))

    ReplyDelete
  4. காதல் பெருக்கெடுத்து
    வெள்ளமாய் பாய்கிறது
    அமராவதி ஆற்றில் ...

    துள்ளி விளையாடும்
    மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ ...

    கரையோரம் அமர்ந்து
    மீன் விளையாட்டை ரசித்தபடி
    காதல் பருகும்
    நாங்கள் ...

    ReplyDelete
  5. /காற்றில் கைகோர்த்து
    விளையாடுகின்றன…
    நாம் பேசிய வார்த்தைகள்!/

    நன்றாய் இருக்கிறது..

    நீவிர்

    காதல் பெறும் கோ....

    ReplyDelete
  6. /உன்னைக் கவிதை என்றேன்!
    ஏன் காதல் கவிதையென்று
    சொல்லவில்லையெனக்
    கோபித்துக்கொண்டால்
    நான் என்ன செய்வது?/

    அப்புறம் கோபம் போனதா இல்லையா?:) பெண்களின் மன இயல்பைக் காட்டும் அழகிய வரிகள்.
    ஷைலஜா

    ReplyDelete
  7. /mmmm கலக்குங்க... /

    நீங்க ஊக்கம் கொடுக்கும்போது என்ன பிரச்சினை? :)

    கலக்கலாம்!!!

    ReplyDelete
  8. இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. /இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள். /

    வாழ்த்துக்கு நன்றிங்க... ஓ சுதர்சன்!!!

    ReplyDelete
  10. /கைகோர்த்து விளையாடும்
    கண்கட்டிவித்தை செய்யும்
    அழகு பேரழகாகும்
    செல்லமாக கோபித்துக்கொள்ளும்
    கொண்டபின் குடும்பம் நடத்தும்
    நினைவோடு தனிமைபடுத்தும்
    பயணிக்கட்டும் காதலாய்
    ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!/

    கவிதைகளையெல்லாம் குளிப்பாட்டி ஒரு கவிதையா? நன்றி...

    //அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :)) //

    என்னது ஓடட்டுமா??? :((((

    ReplyDelete
  11. //காதல் பெருக்கெடுத்து
    வெள்ளமாய் பாய்கிறது
    அமராவதி ஆற்றில் ...//

    அமராவதி ஆத்துல இப்போக் சாயக்கழிவுதான் போயிக்கிட்டு இருக்கு...

    //துள்ளி விளையாடும்
    மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ ...//

    நண்பா நீயுமா? :(

    //கரையோரம் அமர்ந்து
    மீன் விளையாட்டை ரசித்தபடி
    காதல் பருகும்
    நாங்கள் ... //

    !!!

    ReplyDelete
  12. /உங்கள் கவிதை உண்மையில் சூப்பர்.உங்கள் காதல் இதில் பிரதிபலிக்கின்றது. /

    நன்றி ஜொள்ளுப்பேச்சி...
    வருகைக்கும் தருகைக்கும்!!!

    ReplyDelete
  13. //நன்றாய் இருக்கிறது..

    நீவிர்

    காதல் பெறும் கோ.... //

    நன்றி சாத்வீகன்...

    ReplyDelete