Sunday, March 19, 2006

"பூம்"

நான், ஆதாம் ஏவாள் காலத்து
பழைய ஜோக்குகளை
அள்ளி விட்டாலும்
அன்று புதிதாய்க் கேட்பது போல்
பகீரென சிரிக்கிறாய்…

வாக்கியங்களைத் திருப்பிப் போட்டு
நான் வார்த்தைகளில் கிறுக்கியதையெல்லாம்
கவிதையென
சொல்லி சொல்லி இரசிக்கிறாய்…

உனது Good Morning SMS இல்லாமல்
எனது நாட்கள் விடிந்ததுமில்லை…

உனது Good Night SMS இல்லாமல்
எனது இரவுகள் தொடங்கியதுமில்லை…

12 மணிவரை விழித்திருந்து
முதல் ஆளாய் எனது பிறந்த நாளுக்கு
வாழ்த்துச் சொல்கிறாய்…


உனது சின்ன சின்ன சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ள
என் மனம் தேடுகிறாய்…

உனது எல்லா பாரங்களையும்
இறக்கி வைக்க
என் தோள் சாய்கிறாய்…

என்னை மறக்க வில்லையென உணர்த்த
இத்தனையும் செய்வதற்குப் பதிலாக
என்னிடம் வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுத்து விடேன்டா நண்பா!

10 comments:

  1. காதல்னு நினைச்சு ஓடி வந்தா இப்படி கவுத்திட்டீங்களே நண்பா..

    கவிதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  2. என்னப் பண்றது (நிலவு) நண்பன்!

    அவசரப்பட்டுக் காதல்னு ஓடிப் போய் கடைசியிலக் கவுந்து போறது பெரும்பாலும் நடக்கறதுதான!!

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  3. neengalum kadal vasappatu vitteerkal enru ninaithal ippadi ematri viteerkale?

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கீதா!

    //neengalum kadal vasappatu vitteerkal //

    தங்களுடையது காதல் திருமணமோ? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. "இத்தனையும் செய்வது உன்னிடம் வாங்கிய கடனுக்குப் பதிலாக
    தானேடா நண்பா!!!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  6. ராஜா,

    அப்போ இதை வாராக் கடனாக நினைத்து தள்ளுபடி பண்ண வேண்டியதுதானா????

    ReplyDelete
  7. கடனையெல்லாம் விட்டுத்தள்ளு!!
    கணக்கையெல்லாம் சுட்டுத்தள்ளு!!
    நீயும்,நானும் ஒண்ணுதான்னு
    எண்ணிக்கொள்ளடா!!டோய்!!!!.

    ('தளபதி' பட'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே....' பாட்டு மெட்டில்
    படித்து ரசிக்கவும்.)

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  8. நீங்கக் கடனேத் தர வேண்டாம்ப்பா போங்க...

    (ப்ரெண்ட்ஸ் பட வடிவேல் வசனம் - ஆணியேப் புடுங்க வேணாம் போங்க!)

    :)

    அன்புடன்,
    அருள்

    ReplyDelete