[/caption]மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்க இயலாத இதயம்போல!





