Tuesday, August 03, 2010

இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்

கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
[caption id="attachment_451" align="alignright" width="225" caption="சிவ சக்திசிவ சக்தி"]சிவ சக்தி[/caption]


குலசாமி என்பதெல்லாம் முப்பாட்டன் தான்! தொன்மம் தொட்டான்.
கடிக்கிற கொசுவையும் அடிக்கத் தயங்கி ஊதிவிடுகிறவளுக்கு
கிடாவெட்டி இரத்தம் குடிக்கிற ‘அண்ணமலையாளி’யைப் பிடிக்குமா?
அரிவாள் பார்வையால் அவனை வெட்டிவிட்டாள்.

அழகன் முருகன் பழந்தமிழ் மறவன் தான்! தமிழ் பேசினான்.
காதலனின் இதயம், மூளை இரண்டிலும் தானொருத்தியாய் ஆக்கிரமித்தவளுக்கு
இதயத்தில் வள்ளி, தெய்வானை இருவருக்கும் இடமளித்தவனைப் பிடிக்குமா?
வேல்விழியால் அவனைத் துளைத்தெடுத்தாள்.

அம்மன் வழிபாடு தாய்வழிச் சமூகத்தின் குறியீடு! வரலாறுக்கு வந்தான்.
கைக்குட்டை வாங்கப்போனாலும் காதலன் கைகோர்த்துப் போகிறவளுக்கு
சித்திரைத் திருவிழாவின் நகர்வலத்திலும் தன்னந்தனியாய் வருகிறவளைப் பிடிக்குமா?
அக்கினிப் பார்வையால் அவனை அனலாக்கினாள்.

திருமாலின் தசாவதாரங்களும் நன்னெறிக் கதைகள்தாம்! இதிகாசத்தில் நுழைந்தான்.
அவசர நேரங்களில் அவனைவிட்டு தன் தோழனோடு வாகனத்தில் போகிறவளுக்கு
மனைவியை தீக்குள் இறக்கிய இராமனைப் பிடிக்குமா?
பார்வையம்புகளால் அவனைப் பதம் பார்த்தாள்.

கடவுளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் களைத்துப்போன
புதிய பக்தனை சிவாலயத்தில் நிறுத்தினாள்.
தன்னில் பாதியைத் தன்னவளுக்களித்து காதலுடன் காட்சியளித்தார் சிவன்.
‘சிவ!சிவ!’ என்று இதழிசைத்தவளைப் பார்த்தான்.
இரண்டு கண்களையும் மூடி நெற்றிக்கண் திறந்து கண்ணடித்துக் கொண்டிருந்தாள்.

ஓம் நமச்சிவாய!

10 comments:

  1. கண்ணின் கடைப் பார்வை
    கன்னி அவள் காட்டி விட்டால்
    அப்பா வேண்டாம் ஆத்தா வேண்டாம்
    கடவுளே நீயும் வேண்டாம் !
    அவள் சொல்வதுதான் வேதம்
    மதம் மாறட்டுமா
    ஆண்டவனின் பெயரை மாற்றட்டுமா
    எது வேண்டும் சொல் அன்பே
    உனக்காக என்னையே தரும் போது
    மற்ற எல்லாமே தூசிதான்.

    ReplyDelete
  2. நன்றி தமிழன், வழிப்போக்கன்!

    ReplyDelete
  3. yeppa muduyalappa!!

    ReplyDelete
  4. ரொம்ப நாளைக்கப்புறம் அருட்பெருங்கோ!!!!

    ReplyDelete
  5. ஆமாங்க அருணா... பெரிய இடைவளிதான்.

    ReplyDelete